இந்திய விமானப்படையின் ஒரு பிரிவான கருடா சிறப்பு படைகள், அருணாச்சலப்பிரதேசம், சீனா எல்லையில் உயர்வான எல்லைப்பகுதிகளில் கண்காணிப்புக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப்படையின் ஒரு பிரிவான கருடா சிறப்பு படைகள், அருணாச்சலப்பிரதேசம், சீனா எல்லையில் உயர்வான எல்லைப்பகுதிகளில் கண்காணிப்புக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் சக்திவாய்ந்த படையாக கருடா படை பார்க்கப்படுகிறது. இந்த கருடா படையில் தற்போது 2ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கு முப்படைகளிலும் பயிற்சிஅளிக்கப்பட்டு, அனைத்து போலீஸ் பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படும்.

மருத்துவர் சீட்டின்றி ஆன்டிபயாடிக்ஸ் மருந்து விற்றால் மருந்துக் கடை உரிமம் ரத்து:கேரள அரசு அதிரடி

 எந்த சூழலையும் அனாயசமாக எதிர்கொண்டு வெற்றி பெறும் போர் பயிற்சியும், தற்காப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது. கருடா படையினர் ஒரு பகுதிக்கு வந்துவிட்டாலே அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாகவே அர்த்தமாகும். 

Scroll to load tweet…

கருடா கமாண்டோக்களுக்கு அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களான சிக் சார் ரைபிள்கள், ஏகே 103, ஏகே 203 ஆகியவற்றை இயக்கும் பயிற்சி அளித்து தேர்ச்சி பெற வைத்துள்ளது.

கடந்த 9ம் தேதி அருணாச்சலப் பிரதேசம்-சீனா எல்லையான தவாங் பகுதியில் சீன ராணுவம் அத்துமீற முயன்றபோது, இந்தியப் படையினர் தடுத்தனர். இதில் சீன,இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விலகிச் சென்றனர். 

பிளான் பண்ணிடிங்க! பிரதமர் கோவிட் மீட்டிங் எதுக்குணு புரிஞ்சிருச்சு! காங்கிரஸ் கிண்டல்

இதையடுத்து அருணாச்சலப்பிரதேச எல்லையிலும் சீனாவின் எல்லையான கிழக்கு லடாக் முதல் சிக்கம் வரையிலும் கருடா சிறப்பு படையினர் கண்காணிப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

தேவைஏற்பட்டால் எந்தவிதமான சிறப்பு ஆப்ரேஷன்களையும் செய்ய தயாராக வைக்கப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டிலிருந்தே எல்லைப்பகுதியில் கண்காணிப்புக்காக கருடா படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்போது எல்லையில் சிக்கல் ஏற்படும் பகுதிகளுக்கு கருடா படையினர் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Scroll to load tweet…

விமானப்படையின் கருடா சிறப்புப் படையினருக்கு, அமெரிக்காவின் சிக் சார், ஏக சீரிஸ் துப்பாக்கிகள், ரைபிள்கள், இஸ்ரேலின் தவோர் ரைபிள்கள் ஆகியவற்றை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு இரு தேச தந்தைகள்! நவீன இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி: அம்ருதா பட்நாவிஸ் புகழாரம்

எதிரிகளை 800 முதல் 1000 மீட்டர் தொலைவில் இருந்து சுடக்கூடிய கலில் ஸ்நைப்பர் ரைபிள், நெகவ் லகு மெஷின் கன் ஆகியவற்றை இயக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கருடா படையினர் மெகவ் எல்எம்ஜி எந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்திதாந், ஜம்மு காஷ்மீரில் ராகத் ஹஜின் ஆப்ரேஷன் நடத்தி 5 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.