ஜி20 மாநாடு.. உரையாடிய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - இரு நாட்டு தலைவர்கள் பேசியது என்ன?
நாளை செப்டம்பர் 9ம் தேதி மற்றும் நாளை மறுநாள் செப்டம்பர் 10ம் தேதி தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடக்கவுள்ள நிலையில், இன்று செப்டம்பர் 8ம் தேதி பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் டெல்லியில் விமானநிலையம் வந்தடைந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை ஜி20 மாநாட்டிற்கு முன்பாக இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினார். இந்த கலந்துரையாடலில் இரு நாட்டு உறவுகளுக்கான அதிபர் பைடனின் தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். பிரதமரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கப் பயணத்தின் விளைவுகளை, செயல்படுத்துவதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
iCET, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பிற துறைகளில் உள்ள தொடர் வேகத்தையும் அவர்கள் பாராட்டினர். சந்திரயான்-3 வரலாற்று சிறப்புமிக்க நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்கியதற்கு அதிபர் பைடன் இந்தியாவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஜி20 உச்சி மாநாடு: இந்தியா வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தொடர்ந்து பேசிய இரு நாட்டு தலைவர்களும், தங்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்தியாவின் G20 பிரசிடென்சிக்கு அமெரிக்காவின் நிலையான ஆதரவிற்காக ஜனாதிபதி பைடனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அதிபர் பிடன் முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது, நாளை செப்டம்பர் 9-10, 2023 தேதிகளில் புது தில்லியில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இந்தியா-அமெரிக்கவின் விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான அதிபர் பைடனின் தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்புக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். கடந்த ஜூன் 2023ல், இந்தியா-அமெரிக்கா உட்பட, பிரதம மந்திரியின் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்கப் பயணத்தின்போது ஏற்பட்ட முன்னேற்றத்தை இரு தலைவர்களும் பாராட்டினர்.
பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, கல்வி, சுகாதாரம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பில் நல்ல முன்னேற்றங்கள் இருப்பதை எண்ணி இரு நாட்டு தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இரு தலைவர்களும் பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை என்பது இந்த இரு நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நலனுக்கும் பல நன்மை பயக்கும் என்று இரு நாட்டு தலைவர்களும் மகிழ்ச்சிதெரிவித்தனர்.