ஜி20 உச்சி மாநாடு.. இந்தியா வந்தடைந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி - வரவேற்ற அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் நாளை செப்டம்பர் 9 மற்றும், நாளை மறுநாள் செப்டம்பர் 10 ஆகிய இரு நாட்கள் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

Minister Rajeev Chandrasekar Received Australian PM Anthony On behalf of pm modi for the g20 summit ans

அந்த வகையில், ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் திரு. அந்தோணி அல்பானீஸ் இந்தியா வந்தடைந்துள்ளார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி சார்பில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் அவரது சகாக்கள் அந்தோணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி20 உச்சி மாநாட்டில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்.. டிஜிட்டல் இந்தியா முதல் பாரத மண்டபம் வரை.!!

இங்கிலாந்து பிரதமர், இத்தாலி பிரதமர், அர்ஜெண்டினா அதிபர், ஆப்பிரிக்க யூனியன் தலைவர், ஐரோப்பிய ஆணைய தலைவர், ஐஎம்எஃப் தலைவர், உலக வர்த்த மைய இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட பலர் இதுவரை இந்தியா வந்துள்ளனர். டெல்லி விமான நிலையம் வந்த அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புது டெல்லி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு முதல் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தொடங்கியுள்ளன. கடந்த வியாழன் இரவு 9 மணி முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கனரக, நடுத்தர மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் அனுமதிக்கப்படாது. சனிக்கிழமை காலை 5 மணி முதல் டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஷாவிற்கும் இதே கட்டுப்பாடுகள் பொருந்தும்.

ஜி20 உச்சி மாநாடு.. டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு.. எதற்கெல்லாம் தடை.? முழு விபரம் இதோ !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios