G20 உச்சி மாநாடு.. டெல்லியில் பங்கேற்கும் இந்திய அதிகாரிகளின் அடையாள அட்டையும் பாரத் என்று மாற்றம்!!
டெல்லியில் வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 மாநாடு நடக்கவுள்ளது, இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில், அந்த நிகழ்விற்கான ஆயத்தப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை தற்பொழுது இந்தியா ஏற்றுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி உச்சி மாநாட்டு நிகழ்வு நடைபெற இருக்கிறது.
பாதுகாப்பு ஒத்திகைகள் ஒரு புறம் நடந்து வர டெல்லி கவர்னர் விகே சக்சேனா அங்கு நடந்து வரும் பணிகளை குறித்து சில தினங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார். 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் நிலையில் ரஷ்ய அதிபராக புட்டின் இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவருக்கு பதிலாக அந்நாட்டின் வெளிவரவுத்துறை அமைச்சர் செர்ஜி கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியானது.
G20 Summit 2023: இந்தியாவில் நடக்கும் ஜி20 உச்சி மாநாடும் குளோபல் சவுத் நாடுகளின் சக்தியும்
இந்த சூழலில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடக்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டை மாற்றப்பட்டுள்ளதாக தற்பொழுது அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது. வெளியான தகவலின் படி அவர்கள் அடையாள அட்டையில் இருந்த இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரத் என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் இந்த 'பாரத்' என்ற பெயர் மாற்றம் அவசர நடவடிக்கை அல்ல என்றும், கூறப்படுகிறது. ஏன் என்றால், பிரதமர் மோடியின் சமீபத்திய கிரீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா பயணங்களுக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் முதல் வரவிருக்கும் G20 உச்சி மாநாட்டிற்கான அடையாள அட்டைகள் வரை, 'பாரத்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
G20 India : டெல்லியில் ஜி20 மாநாடு நடக்கவிருக்கும் பாரத் மண்டபம் - சில சுவாரசிய தகவல்கள் இதோ!!