G20 India : டெல்லியில் ஜி20 மாநாடு நடக்கவிருக்கும் பாரத் மண்டபம் - சில சுவாரசிய தகவல்கள் இதோ!!
ஜி20 உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஜி20 உச்சி மாநாடு நடக்கவுள்ள பாரத் மண்டபம் குறித்த சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
ஏறக்குறைய 2700 கோடி செலவில் தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள இடம் தான் பாரத் மண்டபம். இந்த சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் G20 உச்சி மாநாட்டை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டு மையம் பெரிய அளவிலான சர்வதேச கண்காட்சிகளை நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்த்தக கண்காட்சிகள், மாநாடு மற்றும் பிற மதிப்புமிக்க நிகழ்வுகள் இங்கு இனி நடக்கும்.
சரி இந்த பாரத் மண்டபம் குறித்த சில சுவாரசிய தகவல்களை இப்பொது காணலாம்
பெயர் காரணம்
கடவுள் பசவேஸ்வரா அளித்த அனுபவ மண்டபம், அதாவது பொது விழாக்களுக்கான ஒரு சிறந்த இடமாக இருந்த அனுபவ மண்டபத்தின் பெயரை தழுவி இந்த இடத்திற்கு பாரத் மண்டபம் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
G20 Summit 2023: இந்தியாவில் நடக்கும் ஜி20 உச்சி மாநாடும் குளோபல் சவுத் நாடுகளின் சக்தியும்
வடிவமைப்பு
பிரகதி மைதான வளாகத்தின் மையப் பகுதியாக இந்த பாரத் மண்டப மாநாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மைய கட்டிடத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பு இந்திய மரபுகளால் ஈர்க்கப்பட்டுள்ளது எனலாம். கட்டிடத்தின் வடிவம், சங்கிலிருந்து பெறப்பட்ட உருவ அமைப்பை கொண்டுள்ளது. மேலும் பல்வேறு சுவர்கள் மற்றும் முகப்புகள் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதில், இந்தியாவின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிட்னி ஓபரா ஹவுஸை விட பெரிய கொள்ளளவு
இந்த பாரத் மண்டபத்தில் உள்ள பல்நோக்கு மண்டபம் மற்றும் Plenary மண்டபம் ஆகிய இரண்டும், 7000 பேர் அமரக்கூடிய திறன் கொண்டது. இது ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற சிட்னி ஓபரா ஹவுஸின் இருக்கை திறனை விட அதிகம். இங்குள்ள ஆம்பிதியேட்டர், 3000 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
பிரகதி மெய்டனில் உள்ள இந்த IECC வளாகம் பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் பல சந்திப்பு அறைகள், ஓய்வறைகள், ஆடிட்டோரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அமைந்துள்ள வணிக மையம், பல்வேறு பெரிய நிகழ்வுகளைத் ஹோஸ்ட் செய்வதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 28 அடி உயரமுள்ள உலகின் மிக உயரமான நடராஜர் சிலையும், பிரம்மாண்டமான இந்த பாரத் மண்டபத்தின் முன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய MICE
ஏறக்குறைய 123 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய MICE (Meeting, Incentives, Conference and Exhibitions) ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இது பெரிய அளவிலான சர்வதேச கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், மாநாடு மற்றொரு மதிப்புமிக்க நிகழ்வுகளை நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.