Asianet News TamilAsianet News Tamil

2047 வரை இந்தியாவுக்கு ஏராளமான நல்வாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஜி20 உச்சிமாநாடு!

நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது, மேலும் நமது ஆயுட்காலம் அதிகரித்துள்ளது, மேலும் நம்மில் பெரும்பாலோர் 2047ஆம் ஆண்டில் இந்தியா உலகின் முதல் மூன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருப்பதைப் பார்க்கப்போகிறோம்.

G20 is just the beginning of good things sgb
Author
First Published Sep 2, 2023, 5:12 PM IST

G-20 அமைப்பில் இந்தியாவின் தலைமையின் கீழ் பிரமாண்டமாக நடைபெறும் இறுதி நிகழ்வான ஜி20 உச்சிமாநாட்டுக்கு உலகத் தலைவர்கள் வருகைதர உள்ளனர். அவர்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்க இந்தியா தயாராகி வரும் நிலையில், இந்தியாவிற்கான பல நல்வாய்ப்புகள் கிடைக்கும் தருணம் வந்துவிட்டது என்று நிபுணர்களின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சிறந்த எதிர்காலத்திற்காக உலகம் ஏற்றுகொள்ளவேண்டிய வசுதைவ குடும்பகம் என்ற கருத்திலிருந்து, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற மாநாட்டின் கருப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. வலுவான நடுத்தர வர்க்கத்தைக் கொண்ட இந்தியா, உலகத் தலைமைப் பொறுப்புகளுக்குத் தயாராக உள்ளது. இந்தியாவை முன்னணியாகக் கொண்டு குளோபல் சவுத் நாடுகள் அதிகாரச் சமநிலையை நோக்கி விரைவாக மாறிவருகின்றன.

எனவே, ஜி20 உச்சி மாநாடு பல நல்ல விஷயங்களின் தொடக்கமாக இருக்கும். சில பகுதிகளில் இடையூறுகளை சாதுர்யமாகக் கையாண்டால் இந்தியா வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செல்லும். 20ஆம் நூற்றாண்டு இந்தியா அசாதாரண முன்னேற்றத்தைக் கண்டது, ஆனால் மேற்கில் உள்ள சில நாடுகளின் ஆணவத்தால் அது சிதைந்தது. இரண்டு உலகப் போர்களும் பெரும் உயிரிழப்புகளுக்கும் பதட்டங்களுக்கு வழிவகுத்தன. மேற்குலகின் பொருளாதாரம் தற்போது மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

பரபரப்பாக வேலை செய்யும் பிரக்யான் ரோவர்! இறுதிக் கட்டத்தை நெருங்கும் சந்திரயான்-3 ஆய்வுப் பணிகள்!

G20 is just the beginning of good things sgb

முன்னணி உலகப் பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளின்படி இந்தியா தனது புகழ்பெற்ற கடந்த காலத்தை மீட்டெடுக்கும். இந்தியர்கள் ஒற்றுமையாக நின்று வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தினால் மட்டுமே இது நிகழும். அப்படி நடந்தால் இந்தியா அமெரிக்காவைப் போல உலகத் தலைமை கொள்ளும் நாடாக மாறுவதை எதுவும் தடுக்க முடியாது.

உலக சூழ்நிலையைப் பார்க்கும்போது, உலகம் இதுவரை அறிந்திராத மிகவும் அமைதியான மற்றும் வளமான காலத்தில் நாம் இன்று வாழ்கிறோம் என்று கூறுகின்றன. நாம் ஆரோக்கியமான மற்றும் பணக்கார உலகில் வாழ்கிறோம். நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது, மேலும் நமது ஆயுட்காலம் அதிகரித்துள்ளது, மேலும் நம்மில் பெரும்பாலோர் 2047ஆம் ஆண்டில் இந்தியா உலகின் முதல் மூன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருப்பதைப் பார்க்கப்போகிறோம்.

நமது பொருளாதார வளர்ச்சிப் பாதை மிகவும் சாதகமாக உள்ளது. அண்டை நாடான சீனாவில் வயதான தலைமுறைக்கு அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் அதற்கு மாறாக இளம் தலைமுறையினர் அதிக அளவில் உள்ளனர்.

நம் இனத்தின் வரலாற்றில் இதற்கு முன் ஒரு நடுத்தர வர்க்க உலகம் இருந்ததில்லை. நடுத்தர வர்க்கத்தினர் தான் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்த முடியும், பணக்காரர்களால் அல்ல என்று கணிப்புகள் காட்டுகின்றன. மக்களின் ஆயுள், வருவாய் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும்போது, மக்கள் தங்கள் அன்றாட தேவைகளைவிட நீண்ட கால நலன்களில் அதிக கவனம் செலுத்த முடியும்.

ஊழல் திமுக அரசால் நலிவடையும் தென்னை நார் தொழில்: அண்ணாமலை கவலை

G20 is just the beginning of good things sgb

இந்திய அரசின் பயணம் மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திரப் போராட்டத்துடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஜவஹர்லால் நேரு அடித்தளம் அமைத்தார். அவரது மகள் இந்திரா காந்தி 1971 இல் பாகிஸ்தானுடனான போரின்போது உறுதியான தலைவராக மாறினார். அவரது படுகொலைக்குப் பிறகு, அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார். அரசு அலுவலகங்களை கணினிமயமாக்குவதில் அவரது தொலைநோக்குப் பார்வை தொலைத்தொடர்பு புரட்சியை துவக்கியது.

1991 இல் பி.வி. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தைத் நடவடிக்கைகள் மற்றொரு சீர்திருத்தமாகும். பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் இந்தியா அணுசக்தி நாடாக மாறியது. வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது.

பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஒரு வலுவான தேசிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது. அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகத்தின் முயற்சியால் பயங்கரவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு எந்திரத்தை வலுப்படுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் உதவியுள்ளார். இந்தப் பின்னணியில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் திசையில் விரைவாகப் பயணிக்கிறது.

122 வருடத்தில் இல்லாத வெப்பம்! இந்தியாவை வாட்டி வதைத்த மிக வறண்ட ஆகஸ்ட் மாதம்!

Follow Us:
Download App:
  • android
  • ios