ஜி20 மாநாடு.. சீனாவில் இருந்து வந்த 46 கார்கள் - பன்னாட்டு தலைவர்கள் எங்கு தங்கியுள்ளார்கள் தெரியுமா?

ஜி 20 நாடுகளுக்கான மாநாடு தற்பொழுது இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று செப்டம்பர் 9ம் தேதியும் நாளை செப்டம்பர் 10ஆம் தேதியும் இந்த மாநாடு நடக்க உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தற்பொழுது இதில் பங்கேற்றுள்ளனர்.

g 20 summit delhi world leaders camped in india Do you know where the international leaders stay ans

டெல்லியில் ஜி 20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வந்தனர். மேலும் ஜி 20 மாநாடு நடக்கவிருக்கும் இடத்திற்கும், உலக தலைவர்கள் தங்கி உள்ள ஹோட்டல்களுக்கும் மற்றும் அந்த ஹோட்டலில் உள்ள பகுதிகளுக்கும் பெரிய அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

நேற்று டெல்லி வந்த அமெரிக்க அதிபர் அவர்கள் டெல்லியில் உள்ள பிரபல ஐடிசி நவ்ரியா ஷெரட்டனில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த ஹோட்டலில் உள்ள சுமார் 400 அறைகளும், அமெரிக்க அதிபர் மற்றும் அவரது சகாக்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜி20 மாநாட்டில் சென்னைக்கு இவ்வளவு முக்கியத்துவமா! கடல்வழி பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனை!

மேலும் டெல்லி தாஜ் ஹோட்டல் சீன அதிபர் ஜிஜிங்பின் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பதால் தற்பொழுது தாஜ் ஹோட்டலில் சீன நாட்டின் பிரதமர் லீ கியன் தங்கி உள்ளார். மேலும் தாஜ் ஹோட்டலில் ஏற்கனவே சீன பிரதமர் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் தங்கி உள்ள நிலையில் பிரேசில் நாட்டு அதிபர் மற்றும் அவருடைய சகாக்களும் அதே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் அவர்கள் கிளாரிட்ஐஸ் என்ற ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், துருக்கி நாட்டு பிரதிநிதிகள் ஓபராய் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல துருக்கி நாட்டு அதிபர் மற்றும் அவர்களுடன் சேர்ந்து ரஷ்ய வெளிவரவுத்துறை அமைச்சர் செர்ஜி அவர்களும் ஓபராய் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

மேலும் பல முன்னணி ஹோட்டல்களில் ஜி20 மாநாட்டிற்கு பங்கேற்க வந்துள்ள தலைவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியாவில் இந்த இரு நாட்கள் அமெரிக்க அதிபர் பயணம் செய்ய அமெரிக்காவில் இருந்து 75 கார்கள் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதே போல சீன அதிகாரிகள் இங்கு பயணம் செய்ய சுமார் 46 கார்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மாநாடு வளாகத்திற்கு வர பன்னாட்டு தலைவர்களுடைய 50 வீவிஐபி ஜெட் விமானங்களும் தற்போது இந்தியாவில் தயார் நிலையில் உள்ளது. இது தவிர டெல்லியில் பன்னாட்டு தலைவர்கள் பயணம் செய்ய அனைத்து ரக சொகுசு கார்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Bharat: இந்தியா கிடையாது.. 'பாரத்'.. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள பகுதிக்கு பெயர் மாற்றம் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios