மாழ்பழத்தை பழுக்க வைக்க கார்பைடுக்குப் பதில் எத்திலீன் வாயுவை பயன்படுத்தலாம்: FSSAI அனுமதி

தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பைட்டின் பரவலான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பழங்களைப் பழுக்க வைப்பதற்கு பாதுகாப்பான மாற்றாக எத்திலீன் வாயுவை FSSAI அனுமதித்துள்ளது.

FSSAI permits ethylene gas as a safer alternative for fruit ripening in India sgb

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கும் கால்சியம் கார்பைடு தடையை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு வர்த்தகர்கள், பழ வியாபாரிகள் மற்றும் உணவு வணிக நிறுவனங்களை எச்சரித்துள்ளது.

மாம்பழம் போன்ற பழங்களை பழுக்க வைக்கும் கால்சியம் கார்பைடு, ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸின் தீங்கு விளைவிக்கும் அசிட்டிலீன் வாயுவை வெளியிடுகிறது. இதனால் இதனை பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடை செய்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில், கோவையில் உள்ள பழக்கடைகளில் இருந்து எத்திலீன் சாக்கெட்டுகளைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 575 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.72 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்தவுடன் குடும்பத்துடன் லண்டன் சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்!

FSSAI permits ethylene gas as a safer alternative for fruit ripening in India sgb

பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்தும்போது, அந்தப் பழங்களில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அசிட்டிலீன் வாயு அதைக் கையாளுபவர்களுக்கு ஆபத்தானது. தலைச்சுற்றல், அடிக்கடி தாகம், எரிச்சல், பலவீனம், உணவுப்பொருட்களை விழுங்குவதில் சிரமம், வாந்தி, தோல் புண்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என FSSAI சொல்கிறது.

ஆபத்துகளை கருத்தில் கொண்டு, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய விதிமுறைகள், 2011 இல் விதி 2.3.5ன் கீழ், பழங்களை பழுக்க வைக்க் கால்சியம் கார்பைடு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

கார்பைடு அல்லது அசிட்டிலீன் வாயுவைப் பயன்படுத்தி பழுக்கவைத்த பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் என்றும் யாரும் அவற்றை விற்கவோ, வைத்திருக்கவோ, விநியோகிக்கவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பைட்டின் பரவலான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பழங்களைப் பழுக்க வைப்பதற்கு பாதுகாப்பான மாற்றாக எத்திலீன் வாயுவை FSSAI அனுமதித்துள்ளது. எத்திலீன் வாயுவை 100 ppm (100 μl/L) வரை பயன்படுத்தப்படலாம் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூரு... இந்தியாவில் பிடித்த உணவு இதுதான்: கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ஓபன் டாக்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios