குஜராத்தின் பொடாட் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தின் பொடாட் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் பொடாட்டின் ரோஜித் கிராமத்தில், கள்ள சாராயம் அருந்திய 10 பேர் நோய் வாய்பட்டனர். இதை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தண்டுகா மற்றும் பொடாட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் தண்டுகா மருத்துவமனையிலும் 2 பேர் பொடாட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் மேல் சிகிச்சைக்காக அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிஹார்கூட இல்லை, தமிழகம்தான் மோசமாம்! எஸ்சி,எஸ்டிக்கு எதிராக வன்முறை குறித்து மத்திய அரசு தகவல்

பொடாட் மற்றும் அகமதாபாத் ஆகிய இரு மாவட்டங்களிலும் சுமார் 14 முதல் 20 பேர் கள்ளச் சாராயம் அருந்தியதால் நோய்வாய்பட்டதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகமதாபாத் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்திரசேகர், தண்டுகா தாலுகாவில் இருந்து அரசு மருத்துவமனையில் நான்கு இறந்தவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டன. மேலும் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 முறை போன் செய்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி; மம்தா பானர்ஜியின் பதில் இதுதான்!!

மேலும் ஒரு அதிகாரி கூறுகையில், இரண்டு உடல்கள் காலையில் அப்புறப்படுத்தப்பட்டது. இரண்டு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகே, ரசாயனத்தால் இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை போலீசாரால் அறிய முடியும் என்றார். ஆனால், இறந்தவர் மற்றும் சிகிச்சையில் இருந்தவர்கள் நேற்று இரவு கள்ளச்சாராயம் அருந்தியதாக குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். பொடாட் மாவட்டத்தில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் மதுபானம் விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கள்ளச்சாராயம் குஜராத் மாநிலத்தில் எளிதாகக் கிடைப்பதாக கூறப்படுகிறது.