பிஹார்கூட இல்லை, தமிழகம்தான் மோசமாம்! எஸ்சி,எஸ்டிக்கு எதிராக வன்முறை குறித்து மத்திய அரசு தகவல்
பட்டியலினத்தவர்கள், பழங்குடி மக்களுக்கு எதிராக அதிகளவில் கொடுமைகள், பல்வேறு வன்முறைகள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம்தான் முன்னணியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பட்டியலினத்தவர்கள், பழங்குடி மக்களுக்கு எதிராக அதிகளவில் கொடுமைகள், பல்வேறு வன்முறைகள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம்தான் முன்னணியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் 345 கிராமங்கள் பட்டியலினத்தவர்கள், பழங்குடி மக்களுக்கு எதிராக கொடுமை, அநீதி இழைக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டில் 27 கிராமங்களாகத்தான் இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவி்த்துள்ளது.
rishi sunak: சீனா நம்பர் ஒன் அச்சுறுத்தல்! விடமாட்டேன்: வரிந்து கட்டும் ரிஷி சுனாக் நீ்ண்ட திட்டம்
பழங்குடிகள், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அதிகமாக வன்முறைகள், கொடுமைகள், அநீதிகள் நடக்கும் மாநிலங்கள் குறித்து தெலங்கானா எம்.பி.க்கள் கோமதி வெங்கட்ரெட்டி, டிஆர்எஸ் எம்.பி. மானே ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேலும் மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் எனும் தொண்டுநிறுவனமும் ஆர்டிஐ மனு மூலமும் இதே கேள்வியை எழுப்பியிருந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதில், “2016 முதல் 2020ம் ஆண்டுவரை தமிழகத்தில் பல்வேறு சாதி தொடர்பாக300 கொலைகள் நடந்துள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள். அனைத்து கொலைகளும் எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடேங்கப்பா! இதுதான்யா மோசடி: ஆளுநர், எம்.பி. பதவி வாங்கித் தருவதாக ரூ.100 கோடி ஏமாற்றிய 4 பேர் கைது
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கும் மாநிலங்களாக, ஆந்திர பிரதேசம், பிஹார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மாகாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம், தெலங்கானா, அந்தமான் நிகோபர் தீவுகள் உள்ளன.
தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அதிகமான கொடுமை நடக்கும் கிராமங்களைக் கொண்டுள்ளது. அடுத்த இடத்தில் தெலங்கானாவில் 66 கிராமங்கள் உள்ளன. நிசாமாபாத் காவல் ஆணையரகத்துக்குஉட்பட்ட 18 கிராமங்கள், பத்ராதிரி கோதாகுதம் பகுதியில் 17, ராமகுண்டம் பகுதியில் 9, நல்கொண்டாவில் 6 , மகப்பூப்நகர், ரச்சகொண்டாவில் தலா 5கிராமங்கள், அடிலாபாத்தில் 4, நாராயணபேட், ஜக்தியல் பகுதியில் தலா ஒரு கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.கர்நாடகாவில், கர்நாடக நகர்புறம், கலாபுர்க்கி, யாத்கிர் பகுதிகள் மட்டும் உள்ளன.
உலகிலேயே சுதந்திரமான நீதித் துறை இந்தியாவில்தான் உள்ளது: தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜுஜு பதில்
பிஹார் மாநிலத்தில் 34 கிராமங்கள் ஒடிசாவில் 19 கிராமங்கள், ராஜஸ்தானில் 11கிராமங்கள், மத்தியப்பிரதேசத்தில் 11 கிராமங்கள், குஜராத்தில் 11 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ராஜ்க்கண்ட் பகுதியில் 10 கிராமங்கள், சத்தீஸ்கரில் 2 மாவட்டங்களில் 101 கிராமங்கள், மகாராஷ்டிராவில் ஜால்கன் மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது.