ஜெய்ப்பூரில் உள்ள டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெய்ப்பூரில் உள்ள டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் முழுவதும் பரவியது. பெயிண்ட் செய்ய பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிஓ சிவகுமார் கூறுகையில், தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் முழுவதும் பரவியது என்று தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து விபத்து குறித்து ஜாம்வா ராம்கர் வட்ட அதிகாரி ஷிவ்குமார் பரத்வாஜ் கூறுகையில், பெயிண்ட் செய்ய பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.