இந்தியாவில் சோதிக்கப்பட்ட 7 நிமோனியா மாதிரிகள்.. சீன நிமோனியாவுடன் ஒத்துப்போகிறது - டெல்லி AIIMS பகீர் தகவல்!
Delhi AIIMS : கொரோனாவின் கோர தாண்டவமே இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், சீனாவில் கடந்த சில நாட்களாகவே ஒரு வகை நிமோனியா தொற்று அங்குள்ள குழந்தைகளை பெரிய அளவில் பாதித்து வருகிறது.
குழந்தைகள் மத்தியில் மூச்சு திணறலை பெரிய அளவில் ஏற்படுவதால் இந்த நிமோனியா நோய் மீண்டும் ஒரு தொற்று நோயை போல பீஜிங் மற்றும் சீனாவின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது டெல்லி AIIMS மருத்துவமனை.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், M-நிமோனியா பாக்டீரியாவின் 7 நேர்மறை மாதிரிகளை பதிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த பாக்டீரியம், சீனா முழுவதும் இப்பொது பரவி, அங்குள்ள உள்ள குழந்தைகளுக்கு திடீரென ஏற்படும் சுவாச நோயுடன் தொடர்புடை பாக்டீரியா என்றும் தெரிவித்துள்ளது AIIMS.
நிறைய குழந்தை பெத்துக்கோங்க... கண்ணீர் விட்டு கதறும் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்
ஒரு ஆய்வில் வெளியான முடிவுகளின்படி, இந்தியாவில் கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2023க்கு இடையில் தான் இந்த 7 நேர்மறை சோதனை செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் நிர்வகிக்கப்பட்ட PCR சோதனை மூலம் ஒரு வழக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியாகியுள்ளது. மீதமுள்ள 6 வழக்குகள் IgM Elisa சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் 2023 வரை இந்த நிமோனியா நோய் தொடர்பாக 30 பிசிஆர் சோதனைகளும், 37 IgM Elisa சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து எடுக்கப்பட்ட 7 மாதிரிகள் தற்பொழுது அந்த பாக்டீரியாவிற்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவலை தான் AIIMS இப்பொது வழங்கியுள்ளது.
மற்ற நோய்க்கிருமிகளின் மீள் எழுச்சிக்காகக் காணப்பட்டதைப் போல, வழக்கு எண்கள் தொற்றுநோய் அளவுகளுக்கு அதிகரிக்குமா அல்லது விதிவிலக்காக பெரிய அளவிலான தொற்றுநோயை ஏற்படுத்துமா என்பதை மதிப்பீடு செய்ய மறு வெளிப்பாட்டின் மேலும் வளர்ச்சி கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது.
மீண்டும் இந்த வெளிப்படுதலின் முன்னேற்றம் மற்றும் தீவிரத்தன்மை கணிப்பது கடினம், மேலும் இது அரிதான நிகழ்வுகளில் கடுமையான நோய் மற்றும் கூடுதல் நுரையீரல் வெளிப்பாடுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்குமா என்பது தெரியவில்லை என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிட் -19ன் நினைவுகளுடன், குழந்தைகளிடையே பரவும் இந்த நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட பல வழக்குகள் காரணமாக மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில் சீனா மற்றொரு அதிர்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், இந்தியா மற்றும் பல நாடுகளில் விரைவாக உலகம் முழுவதும் பரவிய நிமோனியா பாக்டீரியாவால் சற்று அச்சமும் ஏற்பட்டுள்ளது.
பப்புவா கினியாவில் எரிமலை வெடிப்பு.. ரூ.8 கோடி உடனடி நிவாரண உதவியை அறிவித்த இந்தியா..
எழுச்சி காரணமாக, இந்த நிமோனியா வைரஸைக் கண்காணிக்க உலகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவில், டெல்லி எய்ம்ஸ் மற்றும் பிற மையங்களில் வைரஸின் கண்காணிப்பு செய்யப்படுகிறது.