Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் சிறந்த பிரதமர் வாஜ்பாய் காலமானார்!! எய்ம்ஸில் உயிர் பிரிந்தது

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய், இன்று மாலை 5.05 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.
 

former prime minister vajpayee passed away
Author
Delhi, First Published Aug 16, 2018, 5:49 PM IST

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய், இன்று மாலை 5.05 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 93.

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் 11ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளித்துவருவதாகவும் தெரிவித்தது. 

இதையடுத்து இன்று காலை வெளியிட்ட அறிக்கையிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததாகவே தெரிவித்திருந்தது. அதனால் தேசிய அளவில் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்ப்பட்டன. 

இந்நிலையில், வாஜ்பாய் மாலை 5.05 மணிக்கு காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த பிரதமராக அறியப்படும், வாஜ்பாய் மாற்று சிந்தனையுடைய எதிர்க்கட்சியினராலும் விரும்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios