முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி!
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா விருது, இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களை கவுரவுக்கும் விதமாக பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவது என்பது பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவதில் இருந்து மாறுபடுகிறது. பாரத ரத்னா விருதை இன்னாருக்கு வழங்கலாம் என்ற பரிந்துரையை குடியரசு தலைவருக்கு பிரதமர் செய்வார்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறையில் குறிப்பிடத்தக்க வகையில் பாடுபட்ட முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் மற்றும் பசுமை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரது பெயர்களை பாரத ரத்னா விருதுக்கு பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளது விவசாயத் துறையில் மோடி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
முன்னாள் முதல்வர்கள் நரசிம்ம ராவ் மற்றும் சௌத்ரி சரண் சிங் ஆகியோர் பாஜக அல்லாத பின்னணியில் இருந்து வந்தவர்கள். இவர்களது பெயர்கள் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் மூலம், கட்சி சாராமல் தேசிய மரியாதைகள் வழங்கப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.
பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நரசிம்ம ராவ் மற்றும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள், நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் நாட்டிற்கான பங்களிப்பையும், நிபுணத்துவத்தையும் பிரதமர் மோடி மதிக்கிறார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.