பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மறைந்த சோசலிஸ்ட் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

தாக்கூரின் 100வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவின் உயரிய விருது அவருக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது.

பீகாரின் சமஸ்திபூரில் பிறந்த தாக்கூர் இரண்டு முறை அந்த மாநில முதல்வராக பதவி வகித்தார். 'ஜன்நாயக்' என்று அழைக்கப்பட்ட அவர், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்துக்காகப் போராடினார். 1978 நவம்பரில் பீகாரில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அரசுப் பணிகளில் 26 சதவீத இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார்.

1990 களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீட்டிற்காக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த முயற்சி எடுத்தவர்களில் முக்கியமானவர் என்று போற்றப்படுகிறார்.

பெங்களூருவில் 3 நாள் தொடர் மின்வெட்டு அறிவிப்பு! நேர அட்டவணை இதோ...

Scroll to load tweet…

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கெடுத்த கர்பூரி தாக்கூர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கலந்துகொண்டு சிறை சென்றார். 1952ஆம் ஆண்டு முதல் தேர்தல் வெற்றிக்குப் பிறகு எந்தத் தேர்தலிலும் தோல்வியே சந்திக்காத தலைவராக இருந்தார். எளிய வாழ்க்கை மற்றும் சமூக நீதிக்கான பங்களிப்புக்காக அவருக்கு புகழாரம் சூட்டப்படுகிறது.

தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சமூக நீதியின் கலங்கரை விளக்கமான ஜன் நாயக் கர்பூரி தாக்கூர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய தலைவரும் சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்புக்காக உறுதியாக நின்றவருமான அவரது நீடித்த முயற்சிகளுக்கு ஒரு சான்று" எனப் பாராட்டி இருக்கிறார்.

"தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை இந்தியாவின் சமூக-அரசியல் கட்டமைப்பில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. இந்த விருது அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், மிகவும் நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் அவரது பணியைத் தொடர எங்களுக்கு ஊக்கமளிக்கிறது” எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இனி ராம் லல்லா இல்லை... அயோத்தி ராமருக்கு சூட்டப்பட்ட புதிய பெயர் 'பாலக் ராம்'!