Asianet News TamilAsianet News Tamil

UGC: இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிளை தொடங்க யுஜிசி அனுமதி தேவை

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகம்அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெற வேண்டும் என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதீஷ் குமார் இன்று தெரிவித்தார்.

Foreign universities will need UGC approval to establish campuses in India.
Author
First Published Jan 5, 2023, 1:44 PM IST

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகம்அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெற வேண்டும் என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதீஷ் குமார் இன்று தெரிவித்தார்.

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அமைப்பது மற்றும் செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை யுஜிசி இன்று வெளியிட்டது. அதன்பின் யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய அமைச்சர் அமித் ஷா பயணித்த விமானம் அவசரமாக கவுகாத்தியில் தரையிறக்கம்: என்ன காரணம்?

வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளைத் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கோரினாலும் முதல் 10 ஆண்டுகளுக்குமட்டும்அனுமதி தரப்படும்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் முழுநேரமாக, மாணவர்களுக்கு நேரில் வகுப்புகளை நடத்துவதாக இருந்தால் மட்டுமே வளாகம் அமைக்க அனுமதி தரப்படும். ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தும்பட்சத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வளாகம் அமைக்க அனுமதி தரப்படாது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக மாணவர் சேர்க்கை நடத்தலாம், கட்டணத்தை முடிவு செய்யலாம். அதில் தடை இல்லை. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வியின் தரம்,இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக இருப்பது உறுதி செய்யப்படும், 

தங்க மையால் எழுதப்பட்ட அரிதான 16ம் நூற்றாண்டு புனித குர்ஆன் நூல்! ISC மாநாட்டில் வெளிவராத புதிய தகவல்கள்

வெளிநாட்டு  பல்கலைக்கழகங்கள் வளாகம் அமைக்க வழங்கப்படும் நிதியுதவி போன்றவை, மத்திய அரசின் அந்நிய செலாவணி பரிமாற்றச் சட்டத்துக்கு உட்பட்டதாகும். அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டபின் இந்த மாத இறுதியில் இறுதியான விதிமுறைகள் வெளியிடப்படும். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் 9வது ஆண்டில் புதுப்பிக்கப்படும்

இவ்வாறு ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios