Amit Shah News: மத்திய அமைச்சர் அமித் ஷா பயணித்த விமானம் அவசரமாக கவுகாத்தியில் தரையிறக்கம்: என்ன காரணம்?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற விமானம் அவசரமாக அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள லோக்பிரியா கோபிநாத் பர்தோலி சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற விமானம் அவசரமாக அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள லோக்பிரியா கோபிநாத் பர்தோலி சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
திரிபுராவில் உள்ள அகர்த்தலா நகருக்கு அமித் ஷா விமானத்தில் சென்றார். ஆனால், மோசமான வானிலையால் தொடர்ந்து விமானம் பறக்க இயலாத சூழல் இருந்ததால், உடனடியாக இரவு 10.45 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நீதிபதி பதவிக்கு தேர்வான முதல் இந்திய வம்சாவளி... அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற கேரளப்பெண்!!
திரிபுராவில் தேர்தல் பிரச்சாரத்தை அமித்ஷா இன்று தொடங்க உள்ளார். இதற்காக இன்று ரத யாத்திரையை அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளார். இன்று காலை வானிலை நிலவரத்தை அறிந்தபின் அமித் ஷா திரிபுரா புறப்பட்டுச் செல்வார்.
அமித் ஷா விமானம் கவுகாத்தி விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்தத் தகவல் அறிந்ததும், முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா உடனடியாக விமானநிலையம் வந்து அமித் ஷாவை வரவேற்றார். இதையடுத்து அமித் ஷா நேற்று இரவு கவுகாத்தியில் உள்ள ரேடிஸன் ப்ளூ நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துக்கு ரூ.19,744 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
திரிபுராவில் இன்று நடக்கும் பாஜகவின் ஜன பிஸ்வாஸ் ரத யாத்திரையை அமித் ஷா தொடங்கி வைக்கிறார் அதைத் தொடர்ந்து தர்மாநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்க உள்ளார். பிற்பகலில் ஓய்வு எடுத்தபின் அங்கிருந்து தெற்கு திரிபுராவின் சப்ரூம் நகருக்கு அமித்ஷா புறப்படுகிறார்
- Agartala
- Amit Shah
- Amit Shah News
- Amit Shah flight emergency landing
- Chief Minister Himanta Biswa Sarma.
- Guwahati
- Home Minister Amit Shah
- Jana Biswas Rath Yatra
- adverse weather conditions.
- amit shah emergency landing
- amit shah falls
- amit shah flight
- amit shah flight emergency landing
- amit shah helicopter
- amit shah latest news
- cm ys jagan to meet amit shah today
- emergency landing
- emergency landing to amit shah fight
- home minister amit shah flight delayed