நீதிபதி பதவிக்கு தேர்வான முதல் இந்திய வம்சாவளி... அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற கேரளப்பெண்!!
அமெரிக்கவில் நீதிபதியாக இந்திய பெண் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வீடியோ கான் பரன்ஸ் மூலம் அவர் பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்கவில் நீதிபதியாக இந்திய பெண் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வீடியோ கான் பரன்ஸ் மூலம் அவர் பதவியேற்றுக் கொண்டார். கேரளா பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லா என்ற இடத்தை சேர்ந்த ஜூலி ஏ.மாத்யூ என்பவர் திருமணமாகி தனது கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பென் மாகாண பல்கலைக்கழகத்திலும், டெலவாரே சட்ட கல்லூரியிலும் படித்துவிட்டு டெக்சாஸ் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றினார்.
இதையும் படிங்க: சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி
பின்னர் போர்ட் பெண்ட் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஜூலி ஏ.மாத்யூ தேர்வானார். அதன் மூலம் நீதிபதி பதவிக்கு தேர்வான முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை ஜூலி பெற்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தற்போது கேரளாவில் தனது கணவர் வீட்டில் இருக்கும் நீதிபதி ஜூலி ஏ.மாத்யூ, வீடியோ கான் பரன்ஸ் மூலம் பதவி ஏற்றுக் கொண்டார். இதை அடுத்து அவர் அடுத்த நான்கு ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துக்கு ரூ.19,744 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இதுக்குறித்து பேசிய அவர், மீண்டும் நீதிபதியாக பதவியேற்றதை பெருமையாக உணர்கிறேன். இந்த முறை என் கணவர் வீட்டிலிருந்து பதவியேற்க வேண்டும் என்று விரும்பினேன். இல்லையெனில் எனது மாமியார் மற்றும் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்க முடியாத நிலை இருந்திருக்கும். இந்த பதவிறேப் விழாவில் என் கணவரின் குடும்பத்தார் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இதுதான் எனது சிறந்த வேலை. இந்த வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். என் கணவர், பெற்றோர் எனக்கு பெரும் ஆதரவு அளித்து என் வாழ்க்கையில் உறுதுணையாக உடனிருந்தனர் என்று தெரிவித்தார்.