சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி இன்று, புதன்கிழமை டெல்லியில் உள்ள ஶ்ரீ கங்கா ராம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி கடந்த ஆண்டில் மட்டும் அவர் இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். கடைசியாக, 2022 ஜூன் மாதம் 12ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர், சிசிச்சை முடிந்து ஜூன் 18ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வழக்கமான உடல்நல பரிசோதனைக்குத்தான் என்று கூறப்படுகிறது.
தாய் பாசத்தில் உருகும் ராகுல் காந்தி: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!