ஹத்ராஸ் என்ற பெயரில் நாட்டை எரிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுது அமெரிக்கா பாணியில் இன வன்முறை தூண்டி வன்முறை நெருப்பில் நாட்டை தள்ள ஒரு சதி தீட்டப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாடு நிதி தாராளமாக புழங்கியுள்ளது.ஹத்ராஸ் வழக்கில்  அமெரிக்க பாணியில் உத்தரப்பிரதேசத்தை எரித்து நாசமாக்க சதி திட்டம் தீட்டியது அம்பலமாகி இருக்கிறது. 'ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்'  (Justice for Hathras) என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல், அதன் மூலம் வன்முறையை தூண்டும் வகையில் தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

 

இந்த வழக்கு விவகாரத்தை வைத்துக் கொண்டு நாடு முழுவதிலும், அமெரிக்காவில் நடந்த வன்முறையை போல், இந்தியாவிலும் வன்முறையை தூண்ட வெளிநாட்டிலிருந்து பணம் கொட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளிநாட்டு நிதிகளில் முறைகேடுகள் செய்ததை தொடர்ந்து, அரசு வங்கிக் கணக்குகளை முடக்கியது. மனித உரிமை என்ற பெயரில் நாட்டிற்கு விரோதமாக செயல்பட்டு வந்த அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு, நடத்திய மோசடிகள் அம்பலமானதை தொடர்ந்து, இந்தியாவில், தனது கடையை சாத்தியது. அதனால், ஆத்திரத்தில் உள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல், இந்தியாவை பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஹத்ராஸில் வன்முறையை பரப்ப இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பெரும் தொகை வந்துள்ளது தெரியவந்துள்ளது.

வன்முறையின் மோது மாஸ்க் அணிந்து கொண்டு தான் வன்முறையில் ஈடுபட வேண்டும் எனவும், அதிகாரிகளை எப்படி தாக்க வேண்டும் என்பது குறித்து பாடம் எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சதித்திட்டத்தில் PFI, SDPI, உ.பி. மாஃபியாவின் சதி உள்ளதாக கூறப்படுகிறது. வேண்டுமென்றே பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான பல வதந்திகள் பரவின. ஒரு கலவரத்தைத் தூண்ட 'ஃபோட்டோஷாப்' நுட்பம் பயன்படுகிறது. சண்டிகர் வழக்கு தொடர்பான புகைப்படம் பயன்படுத்தப்பட்டது. இதுவரை, சில ஆடியோக்களும் விசாரணையில் சிக்கியுள்ளன.

ஆடியோ டேப்பில் அரசியல் கட்சி, பத்திரிகையாளரின் குரல்களை கேட்கலாம். தடயவியல் விசாரணைக்கு ஆடியோ டேப் அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைத் தூண்டுவதற்கு பெரிய நிதி தரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் -1 கோடி தரப்படும் என பேராசை காட்டப்பட்டுள்ளது. ஆடியோ டேப்பில் ஒரு பெண் பத்திரிகையாளரின் உரையாடலும் அடங்கும்

போராட்டம் என்ற பெயரில் வன்முறையை பரப்புவதற்கான சதியின் ஒரு பகுதியாக, ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக போலி படங்கள் வைரலாகின. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் போலி அறிக்கை கூட வைரலாகியது. இது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான பல வதந்திகள், உணர்ச்சியை தூண்டும் வகையிலான பொய் செய்திகள் பரப்பப்பட்டது.

பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் பணம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மோசமான செய்தி என்னவென்றால், இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஊடகவியலாளர்களும் ஈடுபட்டுள்ளதும் அம்பலமாகி இருக்கிறது.