Asianet News TamilAsianet News Tamil

இந்திய மக்களில் பெரும்பான்மையினருக்கு ராணுவ ஆட்சியே விருப்பம்... சர்வதேச ஆய்வில் தகவல்!

For the majority of Indian people military rule is preferred Information in international research
For the majority of Indian people military rule is preferred Information in international research
Author
First Published Oct 17, 2017, 2:58 PM IST


இந்திய மக்களில் பெரும்பான்மையினர் ராணுவ ஆட்சியின் மீது அதிகமான விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், 85 சதவீதம் பேர் தங்களது அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள முக்கிய நாடுகள் மற்றும் அதன் அரசுகள் குறித்து மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்து பி.இ.டபில்யு.(pew) எனும் ஆய்வு நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது- 

கடந்த 2012ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் பொருளாதார  சராசரியாக 6.9 சதவீதமாக வளர்ந்து வருகிறது. இதனால் 85 சதவீத மக்கள் தங்களது அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக வலுவான ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், நாட்டு மக்களில் 55 சதவீதம் பேர், சர்வாதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

நாட்டு மக்களில் 27 சதவீதம் பேர், நாட்டுக்கு வலிமையான தலைவர் வேண்டும் என்றும், அவர் எடுக்கும் முடிவுகளில் நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் தலையிடாமல் நல்ல நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், ஆசிய பசிபிக் மண்டலத்தில்  இந்தியா உள்ளிட்ட 3 நாடுகள், தங்களை கட்டுப்படுத்த, நிர்வகிக்க தொழில்நுட்ப ரீதியாலான நிர்வாகம் தேவை என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இந்திய மக்களில் 53 சதவீதம் பேர், தென் ஆப்பிரிக்கா மக்களில் 52 சதவீதம் பேர், நாட்டில் ராணுவ ஆட்சியை சிறந்தது, அதுதான் தேவை எனக் கூறுகின்றனர். ஆனால், 50 வயதுக்கும் மேற்பட்ட மக்கள் ராணுவ ஆட்சிக்கு அதிகமான ஆதரவைத் தெரிவிக்கவில்லை. 

இவர்களில் பலர் ஜனநாயக ஆட்சி முறைக்காக பல போராட்டங்களை நடத்தி இருப்பதாலும், அவர்கள் ராணுவ ஆட்சியை விரும்பவில்லை. 

ஐரோப்பிய நாடுகளில் 10 பேரில் ஒருவர் ராணுவ ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios