தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சந்தித்து பேச உள்ளார்.

தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்திக்க நேரம் கோரினார். அப்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும் உள்ளார்.

அதன்படி, டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு 10.30 மணிக்கு சந்திக்கிறார். நாளை பிற்பகல் 12 மணிக்கு சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் இரவு 10.30 மணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்தபடி மழை பாதிப்புகள் குறித்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது மீட்பு பணிகள், அத்தியாவசிய பொருட்கள், பொதுமக்களுக்கு முகம்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் நிவாரணப் பொருட்கள் பக்கத்து மாவட்டங்களில் இருந்து பெற்று தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Scroll to load tweet…

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை சந்தித்து தென் தமிழகத்தின் வெள்ள நிவாரணத்திற்கான படகுகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்வேறு உதவிகளையும் கேட்டு தமிழகத்திற்காக வேண்டுகோள் வைத்தேன். அதற்காக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவருக்கு நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..