கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் கொட்டி தீர்க்கும் கன மழையால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.பெங்களூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. 

ஒரே நாளில் 20 cm அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழையால் பெங்களூரில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது .
வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மல்லேஸ்வரம், ஓக்லிபுரம் உள்ளிட்ட இடங்களில் சப்வேக்களில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

இந்நிலையில், இன்று பெங்களூரில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.பலத்த காற்றின் காரணமாக சாய்ந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பெங்களூரின் உள்ள பெலந்தூர் ஏரி நிரம்பி வழிகிறது. 

மழை நீர் தேங்கியதால் அப்பகுதியில் மிகவும் மோசமான துர்நாற்றம் வீசுகிறது. வீடுகள், சாலைகள், கார் பார்க்கிங்குகள் என எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.