கரும்புகையால் விபத்தில் சிக்கியது விமானம்.....

வங்க தேசத்திலிருந்து  77 பயணிகளுடன் புறப்பட்ட விமான காத்மாண்டு விமான  நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியது

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில்,விமானம் தரை இறங்கிய போது, விமானத்திலிருந்து கரும்புகை வெளியேறி உள்ளது.

 விமானத்தில் இருந்து, தொடர்ந்து கரும்புகை வெளியேறி கொண்டிருக்கிறது.இதில்  17  பேர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயம் அடைந்தவர்களை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடத்த காட்டூத்தீயில் பெண்கள் உயிரிழந்த சம்பவம் செய்தி அடங்குவதற்குள்,காத்மாண்டுவில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.