டிசம்பர் 7 ஆம் தேதி நாடு முழுவதும் ராணுவ கொடி நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டுக்காக தங்களையே அர்ப்பணித்து நாட்டுக்காகவும், சாட்டு மக்களுக்காகவும் போராடி வரும் ராணுவ வீர்களை போற்றுவோம் என்றும், கொடி நாளுக்காக அவர்களுக்கு நாம் தாராளமாக உதவுவோம் என்றும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொடிநாள்என்பதுஇந்திய முப்படைவீரர்களின்அரும்பணிகளையும், தியாகத்தையும்போற்றும்நாளாகும். ஒவ்வொருஆண்டும்டிசம்பர்மாதத்தின்ஏழாம்நாளைபடைவீரர்கொடிநாளாகஇந்தியஅரசும்இந்தியமாநிலஅரசுகளும்கடைப்பிடிக்கின்றன. இக்கொடிநாள் 1949ஆம்ஆண்டுடிசம்பர்ஏழாம்நாள்முதல்இந்தியாமுழுமைக்கும்கொண்டாடப்பட்டுவருகிறது.

தியாகஉணர்வுடன்பணியில்ஈடுபடும்முப்படைவீரர்களின்குடும்பநலன்களையும், முன்னாள்படைவீரர்களின்நலன்களையும்காக்கும்சமுதாயக்கடமையைநிறைவேற்றும்வகையில், கொடிவிற்பனையின்மூலமும்நன்கொடைகள்மூலமூம்திரட்டப்படும்நிதியைபடைவீரரின்குடும்பத்தினரின்நல்வாழ்வுக்காகவும், உடல்உறுப்புகளைஇழந்தவீரர்களின்மறுவாழ்வுப்பணிகளுக்காகவும்பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை கொடி நாள் வாரம் கொண்டாடப்படுகிறது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர், போர், இயற்வை பேரழிவு போன்ற காலங்களில் இந்தியாவையும், இநதிய மக்களையும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது காத்து வரும் ராணுவ வீரர்களை நாம் போற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ராணுவ வீர்களுக்கு உதவும் வகையில், அரசு அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும் கொடிகளை வாங்கி அவர்களுக்கு உதவுவோம் என்றும், பணமாகவோ, காசோலையாகவோ, செக்காகவோ நாம் கொடுக்கும் ஒவ்வொரு பணமும் அவர்களது குடும்பத்திற்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தசமூகக்கடமையைநிறைவேற்றிடும்பொருட்டுகொடிநாள்அன்றுகொடிவிற்பனைமூலமும், நன்கொடைமூலமும்திரட்டப்படும்நிதி, முப்படைவீரர்களின்குடும்பநல்வாழ்விற்கும், உடல்உறுப்புகளைஇழந்தவீரர்களின்மறுவாழ்வுப்பணிகளுக்காகவும், முன்னாள்படைவீரர்களின்மேம்பாட்டிற்காகவும்செலவிடப்படுகிறதுஎனவும் ராஜீவ் சந்திர சேகர் குறிப்பிட்டுள்ளார்.

இவரது டுவீட்டைப் பாராட்டியுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடி நாள் குறித்து டுவிட்டரில் பதிவிட்டதற்கு நன்றி தெரிவித்து, அதை அமைச்சர் ரீடுவிட் செய்துள்ளார்.
