Stray Dog Attack: தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் பலி; நெஞ்சைப் பிளக்கும் சிசிடிவி காட்சிகள்!
ஹைதராபாத் குடியிருப்பு ஒன்றில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் பலியான சம்பவம் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் கூட்டம் ஐந்து வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்துக் கொன்றுவிட்டன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அம்பர்பேட்டையில் உள்ள குடியிருப்பில் சிறுவன் பிரதீப்பின் தந்தை செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். சம்பவம் நடந்த அன்று மகனையும் அழைத்துக்கொண்டு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த சிறுவனை நாய்கள் தாக்கியுள்ளன.
அந்தக் குடியிருப்பு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த நடுங்க வைக்கும் சம்பவத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சிறுவன் தனியாக நடந்து செல்லும்போது மூன்று பெரிய நாய்கள் வந்து சூழ்ந்துகொள்கின்றன. பயந்துபோன சிறுவன் ஓட முயற்சிக்கிறான். ஆனால் நாய்கள் துரத்தி வந்து சிறுவனைத் தரையில் தள்ளுகின்றன. சிறுவன் தப்பிச்செல்ல போராடும்போது நாய்கள் சிறுவனின் ஆடைகளைக் கடித்து இழுக்கத் தொடங்குகின்றன.
எழுந்து ஓட தொடர்ந்து முயற்சி செய்தபோது நாய்களின் தாக்குதலில் இருந்து சிறுவனால் தப்பிக்க முடியவில்லை. பெரிய நாய்கள் நாய்கள் சிறுவனை கடித்துக் குதறி ஒரு மூலைக்கு இழுத்துச் செல்லும்போது மூன்று சிறிய நாய்களும் அங்கே வருகின்றன.
இந்த கொடூரத் தாக்குதலில் சிறுவன் பிரதீப் சம்பவ இடத்திலேயே இறந்துபோவதை சிசிடிவி காட்சிகள் பதிவு செய்துள்ளன. இதுகுறித்து சிறுவனின் குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை என ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
Sex with a Car: காருடன் உறவு கொள்ளும் இளைஞர்! அதிர்ச்சியில் தந்தை!
சமூக ஊடகங்களில் நாய்கள் சிறுவனைத் தாக்கும் வீடியோவைப் பகிர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
Cooker Blast: அரசியல் கட்சியினர் பரிசாகக் கொடுத்த குக்கர் வெடித்து பெண் காயம்
இரண்டு வாரங்களுக்கு முன், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் தெருநாய்கள் தாக்கியதில் நான்கு வயது சிறுவன் இறந்துபோன நிலையில், மீண்டும் அப்படியொரு பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பீகாரில் அர்ரா என்ற இடத்தில் தெருநாய் கடித்தது 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாய்கள் தாக்குவது குறித்து அடிக்கடி வரும் செய்திகள் குடியிருப்பு வளாகங்களில் தெருநாய்களை அனுமதிக்கலாமா என்ற கேள்வியை எழுப்புகின்றன. நாய்களுக்கு உணவளித்ததற்காக சிலர் தாக்கப்பட்டதும் நடந்திருக்கிறது.
இந்த விவகாரம் நீதிமன்றங்களையும் எட்டியுள்ளது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்தல், உணவு அளித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவை குறித்து ஒரு வழிமுறை தேவை என்று மும்பை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Dowry Case: வரதட்சணையில் பழைய பர்னீச்சர்... திருமணத்தை நிறுத்திய மணமகன்!