Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து திருவிழா - ஐதராபாத்தில் நாளை நடக்கிறது

Fish medicine for asthma Festival in Hyderabad
Fish medicine for asthma Festival in Hyderabad
Author
First Published Jun 8, 2017, 12:45 PM IST


ஐதராபாத்தில், ஆஸ்துமா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீன் மருந்து வழங்கும் திருவிழா இன்று நடக்கிறது.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் உயிருள்ள மீனின் வாயில் மருந்தை வைத்து, அதை அப்படியே பாதிக்கப்பட்டவரின் தொண்டைக்குள் வைத்து விழுங்க வைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் மருந்தை சாப்பிடுவார்கள்.

இந்த நிகழ்ச்சியை பத்தினி சகோதரர்கள், குடும்பத்தினர் பரம்பரையாக செய்து வருகிறார்கள். மீன் மருந்தை சாப்பிடுவதால் ஆஸ்துமா நோய்க்கு தீர்வு கிடைக்கிறது என்று நம்புவதால் நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்து இந்த மருந்தை சாப்பிடுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான மீன் மருந்து திருவிழா ஐதராபாத்தில் ஜூன்8-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. 8-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் மீன் மருந்து திருவிழாவுக்காக 32 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

இதில் 2 லட்சம் வரை மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடக்கும் மைதானத்துக்கு செல்ல அனைத்து பஸ் நிலையங்களில் இருந்தும் இலவச சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios