இதன்படி ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் நபர் தேவைப்படும் நபருக்கு உதவி செய்து அதன்மூலம் நேரத்தை ஊதியமாகப்பெறலாம். அதைப்பயன்படுத்தி அதே நேரத்தை பயன்படுத்தி வேறுஒரு சேவையையும் பெற முடியும். பணத்திற்கு பதிலாக நேரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக கமல்நாத் இருந்து வருகிறார், அவர் தலைமையிலான அரசு இந்த புதிய திட்டத்தை ஆன்மீகத்துறை மூலம் கொண்டுவந்து, அரசாணை பிறப்பித்துள்ளது.

முதன்முதலாக இந்த திட்டம் அமெரி்க்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் கடந்த 1827-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் 1973-ம் ஆண்டு ஜப்பானில் முதல்முறையாக டைம் பேங் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. அதன்பின் அமெரி்க்காவைச் சேர்ந்த ைடம் பேங்கின் சிஇஓ எல்கர் இந்த தி்ட்டத்தை பிரபலப்படுத்தியதால், தற்போது 32 நாடுகளில் 500-க்கும் மேற்பட்ட டைம்பேங்க் செயல்பட்டு வருகின்றன.

இப்போது இந்த திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு முதன்முதலாக தங்கள்மாநிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்தில் ஒரு டைம்பேங் தொடங்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச தலைமைச் செயலாளர் ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார்

பணத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிச்சேவையில் பணம் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்த டைம்பேங் திட்டத்தில் பணத்துக்கு பதிலாக நேரத்தை பரிமாற்றம் செய்யப்படும். உதாரணமாக வங்கியில் பணியாற்றும் ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் சென்று ஒரு திறனை கற்கவிரும்பினால், அவர் தனது நேரத்தில் நாள்தோறும் ஒருமணிநேரத்தை அந்த நிறுவனத்தில் செலவிடலாம். ஒரு மாதத்துக்கு செலவிட்டால் 30 மணிநேரம் அந்தநிறுவனத்துக்கு கிடைக்கும். அந்தநிறுவனம் இந்த 30 மணிநேரத்தை வங்கியின் பெயரில் வேறு எந்த நிறுவனத்தின் சேவையைப் பெறவும் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தில் இணைவதற்கு முதல்கட்டமாக 50 ஆயிரம்பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “டைம் பேங்க் தொடங்கியதன் மூலம் மக்களை ஒருங்கிணைக்க முடியும். உதவி தேவைப்படும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரே தளத்தில் இருந்து உதவிகளை பரிமாறிக்கொள்ள முடியும். ஒரு நபருக்கு மட்டுமே தொடர்ந்து உதவிகள் செய்வது குறித்து கவலைப்படத்தேவையில்லை. இங்கு நேரம் மட்டுமே ஊதியமாகத் தரப்படுகிறது” எனத் தெரிவித்தார்