வட கிழக்கு பகுதிகளில் வான்வழி போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி விமான சேவையை வழங்க இந்திய வான்வழி போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் சிவில் டோர்னியர் ரக விமானம் இன்று பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த விமானம் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் டவுன்களிடையே போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு விமான சேவை விரிவடையும்.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 17 இருக்கைகள் கொண்ட டார்னியர் விமானம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் டைபுர்க் வரை ஐந்து டவுன்களை இணைக்கும் சேவையை இன்று துவங்க இருக்கிறது.
ஒப்புதல்:
வட கிழக்கு பகுதிகளில் வான்வழி போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி அங்கு வான்வழி போக்குவரத்து சேவையை வழங்க இந்திய வான்வழி போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், இரண்டு மிக முக்கிய வளர்ச்சிகள் ஏற்படும்.
இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (HAL) முதல் விமானமான டார்னியர் DO-228 டிபுர்காவில் இருந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பசிங்கட் வரை பறக்க இருக்கிறது. பொது பயன்பாட்டுக்காக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட விமானத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்தும இந்தியாவின் முதல் விமான போக்குவரத்து நிறுவனமாக அலையன்ஸ் ஏர் இருக்கிறது.

துவக்க விழா:
விமான சேவை துவக்க விழாவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய ஸ்கிந்தியா, அருணச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநில முதல்வர்களான பெமா காண்டு மற்றும் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
17 இருக்கைகள் கொண்ட டார்னியர் 228 ஏ.சி. கேபின் கொண்டிருக்கிறது. மேலும் இந்த விமானம் பகல் மற்றும் இரவு நேர பணிகளுக்கும் பயன்படுத்த மிடியும். இலக ரக விமானம் ஆனது வடகிழக்கு மாநிலங்களில் ஊள்ளூர் வான்வழி போக்குவரத்தை உருவாக்கி இருக்கிறது.
இரண்டு விமானங்களும் கடந்த வாரம் வியாழன் கிழமை அன்று அலையன்ஸ் ஏர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவை டிபுர்கா விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் ஏர் புதிய தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவற்றை தரையிறக்க இந்திய வான் படை பராமரித்து வரும் மேம்பட்ட லேண்டிங் தளங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
விமான சேவை:
முதற்கட்டமாக அலையன்ஸ் ஏர் விமானம் டிர்புர்காவில் இருந்து பசிகட் பகுதிக்கு செல்ல இருக்கிறது. அடுத்த 15 முதல் 20 நாட்களில் இந்த விமானம் டெசுவில் இருந்து சிரோவுக்கு செல்லும். இவை அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள டவுன்கள் ஆகும். இரண்டாம் கட்டமாக விஜய்நகர், மெச்சுக்கா மற்றும் பல்வேறு இதர பகுதிகளும் இணைக்கப்பட இருக்கின்றன. இந்த பகுதிகளில் இருந்து அருகாமையில் உள்ள டிர்புர்கா மற்றும் லிலாபரி விமான நிலையங்களுக்கு செல்ல ஒன்று முதல் ஐந்து நாட்கள் வரை பயணம் செய்ய வேண்டிய சூழல் இருந்து வந்தது.
