Asianet News TamilAsianet News Tamil

Karnataka Wildfire: சிக்கமகளூருவில் விஷமிகளால் தூண்டப்பட்ட காட்டுத் தீயில் 250 ஏக்கர் வனப்பகுதி நாசம்

கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் விஷமிகளால் தூண்டப்பட்ட காட்டுத் தீயில் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி ஒரே மாதத்தில் அழிந்துவிட்டது.

Fires damage 250 hectares of forest cover in Karnataka's Chikkamagaluru district
Author
First Published Mar 12, 2023, 10:03 PM IST

சென்ற ஒருமாத காலத்தில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 250 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகிவிட்டது. துரதிஷ்டவசமாக இந்தக் காட்டுத் தீ பெரும்பாலும் விஷமிகளால் தூண்டப்பட்டவை என்று வன அதிகாரிகள் கூறுகின்றனர்.

நரசிம்மராஜபுரா தாலுகாவின் சிக்க அக்ரஹார மலைத்தொடர் மற்றும் குத்ரேமுக் எல்லைப் பகுதிகளில் பெரிய அளவில் தீ பரவியுள்ளது. சிக்கமகளூரு தாலுகாவில் உள்ள கிரி, முடிகெரே தாலுகாவில் உள்ள சர்மாடி கட் ஆகிய பகுதிகளிலும் காட்டுத்தீ மூண்டது.

இந்தப் பகுதிகளில் நிலப்பரப்பு செங்குத்தாக இருப்பதாலும் காய்ந்த புல்வெளிகள் அதிகமாக இருப்பதாலும் தீயைக் கட்டுப்படுத்துவது கடினமான பணியாக உள்ளது என வனத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். இதுபற்றி வனப் பாதுகாவலர் எம். சி. சித்தராமப்பா கூறுகையில், "திறமை வாய்ந்த வனத்துறை ஊழியர்கள் காட்டுத் தீயைத் தடுக்க தொடர்ச்சியாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக புதிதாக எங்கும் காட்டுத் தீ ஏற்பட்டவில்லை" என்கிறார்.

Same Sex Marriage: தன்பாலின திருமணத்தை ஏற்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

"வனப்பகுதியை ஆக்கிரமித்தல், மரங்களை வெட்டுதல் போன்ற மனிதர்களின் நடவடிக்கைகளால்தான் பெரும்பாலான காட்டுத் தீ ஏற்படுகிறது. இது தவிர, சில சமூக விரோதிகள் வேண்டுமென்றே காடுகளுக்கு தீ வைக்கிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார். சிக்கமகளூரு மாவட்டத்தில் உருவாகும் ஏழு ஆறுகள் மற்றும் ஷோலா காடுகள் இதுபோன்ற காட்டுத் தீயினால் நிச்சயம் பாதிக்கப்படும் என சித்தராமப்பா கவலை தெரிவிக்கிறார்.

"இயற்கை வளங்களைச் சேதப்படுத்துவதால் வன விலங்குகள் மனிதர்களைத் தாக்குவது வரும் நாட்களில் அதிகரிக்கும். மக்கள் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு வனத்துறைக்கு ஒத்துழைக்க கொடுக்க வேண்டும்" என சித்தராமப்பா கேட்டுக்கொள்கிறார். துணை கமிஷனர் கே. என். ரமேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் ஆகியோர் வனத்துறைக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், வனத்துறையினருடன் ஒத்துழைக்குமாறு காவல்துறையும் அறிவுறுத்தியுள்ளது.

காட்டுத் தீயில் இருந்து சிறிது நேரத்தில் தப்பிய ஒரு அதிகாரி, சிகிச்சைக்குப் பிறகு இப்போது குணமடைந்து வருகிறார். தீயை அணைக்கும் பணியின்போது வன ஊழியர்களின் 3 இருசக்கர வாகனங்கள் தீயில் நாசமாகிவிட்டன. காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து நடத்திய கூட்டு விசாரணையில், பாலேஹொன்னூர் அருகே காட்டுத் தீயை மூட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் இருவரையும் தேடிவருகின்றனர்.

என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது: பிரதமர் மோடி

Follow Us:
Download App:
  • android
  • ios