டெல்லியில் பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் 2023, ஜனவரி 1ம் தேதிவரை தடை விதித்து டெல்லி அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் 2023, ஜனவரி 1ம் தேதிவரை தடை விதித்து டெல்லி அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்-லைனிலும் டெல்லிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

ncert:ஆன்-லைன் கல்வி சிரமம்! தேர்வுகளும், முடிவுகளும் பள்ளி மாணவர்களுக்கு பதற்றம்: என்சிஇஆர்டி ஆய்வில் தகவல்

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டெல்லியில் அனைத்துவகையான பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் 2023, ஜனவரி 1ம்தேதிவரை முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. ஆன்-லைனிலும் பட்டாசுகள் விற்பனை, டெலிவரி ஆகியவையும் டெல்லி நகரில் இருக்ககூடாது. மக்களின் வாழ்க்கை காக்கப்பட வேண்டும். 

ncrb:முதியோர் கொலையில் தமிழகம் முதலிடம் ! வயதானவர்கள் வாழ தகுதியில்லாதவர்களா? என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்

இந்த உத்தரவை டெல்லி போலீஸார், டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியக் குழு மற்றும் வருவாய் துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தத் தடையை இந்த அதிகாரிகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இதேபோன்று பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடிக்கவும் டெல்லி அரசு தடை விதித்தது. இந்தத் தடை செப்டம்பர் 28 முதல் 2022 ஜனவரி 1ம் தேதிவரை இருந்தது.

csif: airports: விமானநிலைய பாதுகாப்பு தனியார் வசம் செல்கிறது! 3,000 சிஎஸ்ஐஎப் பணியிடங்கள் நீக்கம்

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு, காற்று மாசு ஆகியவை குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்யவும், விழிப்புணர்வு செய்யவும் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் தடையை மீறி பட்டாசுகள் வெடித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ அவர்கள் மீது வெடிமருந்து தடுப்புச்சட்டம், ஐபிசி பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரித்துள்ளது.