ஆந்திராவில் சினிமா தியேட்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ கன்யா சினிமா ஹால் உள்ளது. இங்கு அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தியேட்டரின் தரைத்தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதனால் கூரையில் இருந்து பல அடி உயரத்தில் தீ பற்றியதால் அப்பகுதிய முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இது தொடர்பாக உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்புப்படையினர் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து இவர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியுள்ளன. தீப்பிடித்தபோது சில ஊழியர்கள் இருந்ததாகவும் அவர்கைள உடனே வெளியேற்றியதாகவும் கூறியுள்ளனர். தீ அணைக்கப்பட்ட பின்னரே சேத விவரம் முழுமையாக தெரியவரும்.

 

தீப்பிடித்தபோது ஒருசில ஊழியர்கள் மட்டுமே தியேட்டர் வளாகத்தில் இருந்ததாகவும், அவர்கள் உடனடியாக வெளியேறிவிட்டதாவும் தெரிகிறது. தீயை முழுமையாக அணைத்தபிறகே சேத விவரம் தெரியவரும். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.