சென்னையில் நடந்த ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு தமிழகத்தில் இருந்து வேலை பெற்றவர்களுடன் உரையாடினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்கிழமையன்று, சமீபத்திய ரோஜ்கர் மேளாவின் கீழ் பணி நியமனக் ஆணை பெற்றவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரோஜ்கர் திட்டத்தின் பலன்களைப் பற்றி பொதுமக்களிடம் எடுத்துக் கூறுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு இன்று பணி நியமனக் ஆணைகள் வழங்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு பேசினார்.

இதில் சென்னையைச் சேர்ந்த சுமார் 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தபால் துறை, ரயில்வே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பெட்ரோலியம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பிற துறைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேடை முன் குழந்தையைத் தூக்கி வீசிய தந்தை! முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பரபரப்பு

Scroll to load tweet…

பின்னர், பயனாளிகளிடம் கலந்துரையாடிய அமைச்சர், "ரோஸ்கர் மேளா திட்டத்தின் பலன்களை அனைவருக்கும் எடுத்துச் செல்லுங்கள், அவர்களையும் வாழ்க்கையில் உயரச் செய்யுங்கள்..." என்று எடுத்துக் கூறினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமம் மோடியின் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ரோஜ்கர் மேளா என்றும் அவர் கூறினார்.

அதிக வேலை வாய்ப்புகளுக்கான உருவாக்குவதற்காக ரோஜ்கர் மேளா திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும் இளைஞர்களை தேசிய வளர்ச்சியில் தீவிரமாக பங்கேற்க உதவுகிறது எனவும் கூறிய நிதி அமைச்சர், பயனாளிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, வாழ்த்து கூறினார். வேலை கிடைத்த மகிழ்ச்சியில் கண்கலங்கிய பெண்ணுடன் உரையாடிய அமைச்சர், அவரை நெகிழ்ச்சியுடன் கட்டி அணைத்து "நல்லா இரும்மா" என்று வாழ்த்தினார்.

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் மூத்த வணிக மற்றும் டிக்கெட் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணிபுரிய உள்ளனர். பணி நியமன ஆணையைப் பெறும் அனைவருக்கும் கர்மயோகி கையேடு விநியோகிக்கப்படும். கர்மயோகி கையேடு என்பது பல்வேறு அரசு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கான ஆன்லைன் வழிகாட்டல் தொகுப்பு ஆகும்.

9 ஆண்டு பாஜக ஆட்சியை கொண்டாட தயாராகும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்