இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்;எம்.பியின் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில்!
அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அவையில், தெலுங்கானா எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பின்வரும் விஷயங்களை கூறியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்திய அளவில் அதிகமாக கடன் வாங்கி உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், மார்ச் மாதம் வரை தமிழகத்தின் மொத்த கடன் தொகை சுமார் 7 லட்சத்து 53 ஆயிரத்து 860 கோடியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தை உத்தர பிரதேசமும் மூன்றாவது இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று ஜூலை 24ம் தேதி 164-வது வருமான வரி தின கொண்டாட்டத்தை ஒட்டி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் உள்ள Vigyan Bhavanல் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபை நோக்கி பேரணி; தடுப்புகள் மீது ஏறி போராட்டம்