Asianet News TamilAsianet News Tamil

உரம், டிராக்டர் உதிரி பாகங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு… அருண் ஜெட்லி அறிவிப்பு…

fertilizer. tractor spares...gst
fertilizer. tractor spares...gst
Author
First Published Jul 1, 2017, 7:41 AM IST


உரம், டிராக்டரின் சில உதிரி பாகங்களுக்கு  ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், உரம், டிராக்டர் பாகங்கள் ஆகியவற்றுக்கு வரியை குறைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, உரத்துக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால், உரத்தின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்ததால், வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க  ஜிஎஸ்டி  ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.  இதனால் உரம் விலை குறையும் குறியும் என்றும் அவர் தெரிவித்தார்..

இதே போன்று  டிராக்டர்களின் சில உதிர்  பாகங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என குறிப்பிட்டார்.

இதுதவிர, சில கூடுதல் விதிமுறைகளுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios