Asianet News TamilAsianet News Tamil

உள்ளாடையை கழற்றியே ஆகணும்.. நீட் தேர்வில் சர்ச்சை - மாணவி பரபரப்பு புகார் !

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளது உள்ளாடையை கழற்ற சொல்லிய சம்பவம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Female students asked to remove innerwear at NEET exam centre at kerala
Author
First Published Jul 18, 2022, 7:43 PM IST

நாடு முழுவதும் 18 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு, கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மருத்துவப் படிப்புகளில் 2022-23ம் கல்வியாண்டுக்கான சேருவதற்கான நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும் 10 லட்சத்து 64 ஆயிரத்து 606 மாணவிகள், 8 லட்சத்து 7 ஆயிரத்து 711 மாணவர்கள், 12 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 

நாடு முழுவதும் மொத்தம் 497 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடந்தது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் 59 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடந்தது. தேர்வு மையத்திற்கு காலை 11.40 மணியில் இருந்து வரலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. அதன்படி, மாணவ, மாணவிகள் 11 மணியில் இருந்தே தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். 

Female students asked to remove innerwear at NEET exam centre at kerala

மேலும் செய்திகளுக்கு..மச்சி சைட்டிஷ் வாங்கிட்டு வா.. மது போதையில் நண்பனை போட்டு தள்ளிய நண்பர்கள்.!

சில தேர்வு மையங்களின் நுழைவுவாயில் பகுதியில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு, முறையான பரிசோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக பின்பற்றப்படும் கெடுபிடிகளுடனேயே நேற்று தேர்வு நடந்தது. மாணவிகள் ஆபரணங்கள் எதுவும் அணிந்து செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் மாணவர்கள் காப்பு, கம்மல், செயின், பெல்ட், முழுக்கை சட்டை அணிந்து வர தடை இருந்தது. அதேபோல், முழுக் கை சட்டை அணிந்து வந்தவர்களை மாற்று உடை அணிந்து வரும்படி திருப்பி அனுப்பினர்.

குறிப்பாக மாணவ, மாணவிகளின் தலைமுடி முதல் கால் பகுதி வரை முழுமையாக அதற்கான கருவியை கொண்டு பரிசோதித்தனர். கொரோனா தொற்றுக்கு இடையில் நீட் தேர்வு நடைபெற்றது. எனவே உடல் வெப்பநிலை பரிசோதனை, சமூக இடைவெளியை பின்பற்றிய படி தேர்வர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, அவர்கள் அணிந்து வந்த முககவசத்தை வெளியே கழற்றிவிட்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டனர். 

மேலும் செய்திகளுக்கு..புதிய கட்சியை தொடங்கும் சசிகலா? பதறும் இபிஎஸ் - ஓபிஎஸ்.. அதிமுக என்னவாகும்?

Female students asked to remove innerwear at NEET exam centre at kerala

இந்நிலையில் தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி, அதன்பின் தேர்வு எழுத அனுமதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அயூரில் உள்ள தேர்வு மையத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது. சூரநாட்டை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

அதில், தேர்வு மைய நுழைவாயிலில் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்து, ஆடைகளையும் சோதனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயல் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு மட்டுமின்றி அங்குவந்த மாணவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டதாகவும், மாணவர்களின் உள்ளாடைகள் பெறப்பட்டு அவற்றை இரண்டு அறைகளில் வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.

மேலும், உடலில் உலோக பொருள் இருக்கக்கூடாது என்பது விதி என்பதால் தேர்வு மையத்தில் உள்ளவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மாணவியின் புகார் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios