Asianet News TamilAsianet News Tamil

தொடர்ந்து 4 மாதம்…. மகிழ்ச்சியில் மத்திய அரசு…பிப்ரவரியில் கல்லா கட்டிய ஜி.எஸ்.டி. வசூல்

தொடர்ந்து 4 மாதமாக கடந்த பிப்ரவரி மாதத்திலும் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. இருப்பினும் முந்தைய ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது சென்ற மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் குறைந்துள்ளது.

Feb GST Collection
Author
Chennai, First Published Mar 2, 2020, 6:50 PM IST

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஜி.எஸ்.டி. வரி நம் நாட்டுக்கு புதியது என்பதால் அதில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. அந்த கவுன்சில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளை களைந்து வருகிறது.

Feb GST Collection

பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான 3 மாத காலத்தில் மாதந்திர ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருந்தது. ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தது மத்திய அரசுக்கு நிதிநெருக்கடியை உண்டாக்கியது.

Feb GST Collection

இந்த சூழ்நிலையில், கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரையிலான 3 மாதங்களிலும்  ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. இந்நிலையில் தொடர்ந்து 4 மாதமாக கடந்த பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 2020 பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வாயிலாக ரூ.1.05 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் (2019 பிப்ரவரி) ஒப்பிடும் போது 8 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் 2020 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது குறைவாகும். அந்த மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.10 லட்சம் கோடியாக உயர்ந்து. இருந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios