Uorfi Javed : ஃபேஷனான ஆடைகளை அணிந்து அடிக்கடி தலைப்பு செய்திகளில் வரும் உர்ஃபி ஜாவேத் பற்றி தமிழ்நாட்டிலும் பலருக்கு தெரியும். இந்நிலையில் அவரை கைது செய்யப்பட்டதாக வந்த வீடியோ ஒன்றால் இப்பொது மும்பை நகரில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

Uorfi Javed தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டார், அந்த வீடியோவில் அவர் தான் "பேஷன் போலீஸ்" மூலம் "கைது செய்யப்பட்டதாக" அந்த பதிவில் எழுதியிருந்தார். சமீபத்திய வீடியோ, சிறை போன்ற ஒரு அமைப்பைக் கொண்டிருந்தது, இது ஒரு தனியார் ஃபேஷன் பிராண்டின் ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில், அவர் ஆரஞ்சு நிற உடையில் விளையாடுவதையும், சிறைச்சாலையில் கைதிகளுக்கு வழங்குவது போன்ற ஒரு அட்டையை உயர்த்திப் பிடித்திருப்பதையும் காணலாம். முன்னாள் பிக்பாஸ் OTT போட்டியாளாரான இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட அந்த வீடியோ மும்பை நகரில் மட்டுமல்லாமல் மும்பை நகர போலீசையும் உற்றுநோக்க வைத்தது.

"கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்".. சந்தானம் பாணியில் களமிறங்கிய சதிஷ் - Conjuring Kannappan ட்ரைலர் இதோ! 

வெளியான அந்த வீடியோவில், போலீஸ் அதிகாரிகளைப் போல உடையணிந்த இரண்டு பெண்கள், உர்ஃபி ஜாவேத்தை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் உண்மையில் அவர் கைது செய்யப்பட்டாரா என்று மும்பை போலீசாரிடம் விசாரிக்கும் அளவிற்கு பிரச்சனை செல்ல மும்பை போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

View post on Instagram

இதனையடுத்து மும்பை போலீசார் வெளியிட்ட பதிவில் "மும்பையில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் "தவறான" வீடியோவில் தொடர்புடையவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்.மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போலி இன்ஸ்பெக்டர் வேடமணிந்திருந்த நபர் கைது செய்யப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

View post on Instagram

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D