டெல்லியில் விவசாயிகள் 8 வது நாளாக மொட்டியடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் ரத்து, நதிகளை இணைத்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

கடந்த 16ம் தேதி தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மனிதர்களை ஏரில் பூட்டி உழுதல், செருப்பு, துடைப்பத்தால் அடித்துக்கொள்ளுதல் என தினம் ஒரு போராட்த்தை விவசாயிகள் நட்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 8 வது நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காலை 10 மணிக்கு மனித மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகள், விஷ பாட்டில்கள் ஆகியவற்றுடன் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று பாதி மொட்டை அடித்த குப்பாகவுண்டர், சக்கரபாணி, செல்லப்பெருமாள், சதாசிவம், சுப்பிரமணி ஆகிய 5 விவசாயிகளும் இன்று முழு மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.