பிப்ரவரி 29-ம் தேதி 'டெல்லி சலோ' பேரணி ஒத்திவைக்கப்படுவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, கொள்முதல் உத்தரவாதம், விவசாய கடன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலுயுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் இதர விவசாயிகள் குழுக்கள் இணைந்து டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கி உள்ளனர். ஆனால் அவர்களை ஹரியானா எல்லையில் போலீசார் தடுத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் பிப்ரவரி 29-ம் தேதி வரை தங்கள் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அதுவரை பஞ்சாப் எல்லையிலேயே தங்கி பல்வேறு கட்ட போராட்டங்களை அமைதியான முறையில் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று மெழுகுவர்த்தி ஊர்வலமும், நாளை விவசாயிகள் தொடர்பான கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன. பிப்ரவரி 26 அன்று, போராட்டக்காரர்கள் உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் அமைச்சர்களின் உருவ பொம்மைகளை எரிக்க உள்ளனர். மேலும், சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா மன்றங்களின் பல கூட்டங்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளன.

டெல்லியில் போராடும் விவசாய சங்க தலைவர்கள் மீது தேச தலைவர்கள் சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அம்பாலா போலீசார் அறிவித்தனர். மேலும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுமென போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

இனி 3 நாட்களில் புதிய மின் இணைப்பு கிடைக்கும்... மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..

முன்னதாக கடந்த புதன்கிழமை கானௌரியில் நடந்த மோதலின் போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்தார், பலர் போலீசார் காயமடைந்தனர், இதனால் விவசாயிகள் தங்கள் அணிவகுப்பை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைத்தனர். பதிண்டாவைச் சேர்ந்த 21 வயதான சுப்கரன் சிங் இந்த மோதலில் உயிரிழந்தார். மேலும் அவரின் மரணத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது தொடர்பாக விவசாயிகள் தலைவர்கள் பஞ்சாப் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவரின் உடல் தகனம் செய்யப்படாது என்றும் தெரிவித்தனர். 

திரு சிங்கின் மரணத்திற்கு போராட்டக்காரர்கள் காரணமான ஹரியானாவைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யத் தயங்குவதாக விவசாயிகள் பஞ்சாப் காவல்துறையை விமர்சித்தனர். இதற்கு பதிலளித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சிங்கின் சகோதரிக்கு ₹ 1 கோடி இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்குவதாக அறிவித்தார். இருப்பினும், இளம் விவசாயியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வலியுறுத்தியதால், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் இந்த நடவடிக்கை தோல்வியடைந்தது.

இதே போல் பதிண்டாவில் உள்ள அமர்கர் கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான தர்ஷன் சிங் இறந்ததையும் விவசாய சங்கத்தினர் அறிவிதனர், அவர் கானௌரி எல்லையில் மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் போராட்டங்களில் ஏற்பட்ட 4-வது உயிரிழப்பு இதுவாகும். 

இவருக்கு இந்த நிலைமையா.. சிஇஓ ரவீந்திரனை நீக்க பைஜூவின் முதலீட்டாளர்கள் வாக்களிப்பு.!

நிதி அமைச்சரின் வாக்குறுதி

விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக தெரிவித்தார். விவசாயிகளின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த விஷயத்தில் எடுத்துரைத்து வருவதாகவும் திருமதி சீதாராமன் தெரிவித்தார். மேஎலும் "பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்காக என்ன செய்துள்ளார்கள் என்ற பட்டியலை என்னால் வழங்க முடியும். , பிரதமர் மோடி விவசாயிகளின் நலனுக்காக ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.