உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரயில் சிறிது தூரம் சென்றதும் 6 பெட்டிகள் தடம்புரண்டது. அதில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். லக்னோ, வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உருக்குலைந்த ரயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.