மன அழுத்தம் காரணமாக பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

 மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்,மௌமித்ரா சாஹா என்ற 23  வயதான பெண்  தொலைக்காட்சி தொடர்களில் நடித்து  வருகிறார்.

இவர் நேற்று அதிக நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த  பக்கத்துக்கு வீட்டினர், நடிகை தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து  உள்ளார்.

பின்னர், வீட்டின் உரிமையாளர் வந்து  கதவை உடைத்து திறந்து பார்க்கும் போது , நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே,விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,அவருடைய  உடலை கைப்பற்றி,மொபைல்,பேஸ்புக் அக்கவுன்ட் களை சோதனை செய்தனர்.

அனைத்தையும் சோதனை செய்த பின்னர், மன அழுத்தம் காரணமாக சில நாட்களாக  தனிமையில்  நடிகை சோகத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது என முதற்கட்ட  விசாரணையில் தெரிய வந்துள்ளது.