தனியார் வங்கி ஏடிஎம்-இல் கள்ளநோட்டு... பணம் எடுக்க வந்தவர் அதிர்ச்சி!!

உ.பி.யில் தனியார் ஏடிஎம்மில் இருந்து கள்ள நோட்டுகள் வந்தது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

fake two hundred rupees notes dispenses from atm at uttarpradesh

உ.பி.யில் தனியார் ஏடிஎம்மில் இருந்து கள்ள நோட்டுகள் வந்தது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசம் அமேதியில் உள்ள முன்ஷிகஞ்ச் சாலை சப்ஜி மண்டி அருகே உள்ள தனியார் ஏடிஎம்-இல் இருந்து 200 ரூபாய் கள்ள நோட்டு வந்துள்ளது. அசல் 200 நோட்டைப் போலவே அது இருந்தாலும், கவனமாகப் பார்த்த போது அதில், சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா" மற்றும் "ஃபுல் ஆஃப் ஃபன்" போன்ற வரிகள் எழுதப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பற்றி எரிந்த பேருந்து... தீயில் கருகிய பேருந்து பணியாளர்கள்... ராஞ்சியில் நிகழ்ந்த சோகம்!!

fake two hundred rupees notes dispenses from atm at uttarpradesh

போலி நோட்டு கிடைத்ததும், வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்ததோடு ஏடிஎம்மில் இருந்து கள்ள நோட்டு வெளிவரும் வீடியவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து போலி நோட்டுகளைப் பெற்ற சில வாடிக்கையாளர்கள், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைரலாக்கி வங்கிக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், டிஜிபிகளுடன் பிரதமர் மோடி வரும் 28ம் தேதி கலந்தாய்வு

fake two hundred rupees notes dispenses from atm at uttarpradesh

ஏடிஎம்களில் போலி நோட்டுகளைப் பெறுபவர்கள் என்ற செய்தி வேகமாக பரவியது. ஏடிஎம் மையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலி நோட்டுகள் வெளியானது குறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து உ.பி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பயனர்கள் பலர் அரசை சாடியுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios