கடந்த 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். இதனால் நாடெங்கும் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு மோடியும் மத்திய அமைச்சர்களும் மாறி மாறி கூறிய காரணம் நாட்டிலுள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதற்காகவும் நாட்டில் கள்ளநோட்டுகள் ப்ழக்கம் அதிகரித்து விட்டதால் இந்த ஏற்பாடு என்றும் கூறினர்.

தீவிரவாதிகள் இந்திய கரன்சிகளை அடிப்பதால் இந்த ஏற்பாடு இதன் மூலம் கள்ளநோட்டுகள் ஒழியும் என்றெல்லாம் மாறி மாறி ஊடகங்கள் மூலம் முழங்கினார்கள். நாளையே இந்தியா தலைகீழாக அப்படியே மாறப்போகுது என்று முழங்கினர்.

 சாதாரணமாக இருக்கும் கள்ள நோட்டுகளை அழிக்கிறேன் என்ற பெயரில் இப்போது இருக்கும் லட்சக்கணாக்கான ரூபாய்களை அழிப்பது என்ன நியாயம் , சரி புதிதாக கொண்டுவரும் ரூபாயையும் கள்ள நோட்டுகள் தயார் செய்ய மாட்டார்கள் என எப்படி சொல்ல முடியும் என்று கல்வியாளர்கள் , பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பினர். 

கள்ள நோட்டுகளால் இந்திய பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாத நிலையில் ஏன் இந்த அவசர மாற்றம் என்று கேட்கிறார் பா.சிதம்பரம். ரூ.400 கோடி கள்ள நோட்டுகள் புழங்குவதாக ரிசர்வ் வங்கியே சொல்லும்போது அதை அழிக்கிறேன் என்று 17 லட்சத்து 50000 கோடி ரூபாய் நல்ல நோட்டுகளை அழிப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார் பா.சிதம்பரம்.

புதிதாக வெளிவந்துள்ள ரூ.2000 நோட்டுகள் ஜப்பானிய தொழில் நுட்பம் அப்படி என்றெல்லாம் கதையளந்தது பொய்யானது. தற்போது வெளியாகி உள்ள ரூ.2000 நோட்டு மாதிரியே கள்ளநோட்டு அடிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளதாக போட்டோ ஆதாரத்துடன் செய்திகள் வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

முதல் கள்ள நோட்டு கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் ஒரு காய்கறி மார்க்கெட்டில் பிடிபட்டுள்ளது. அதில் தெளிவாக பல விஷயங்கள் ஒப்பிட்டு பார்க்கும்போது சாதரணமானவர்களுக்கே தெரிகிறது.