கர்நாடகா சட்டசபை தேர்தல் குறித்து போலி தேர்தல் கருத்துக் கணிப்பு; நடந்தது என்ன?
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கன்னட பிரபா நாளிதழ் தொடர்பாக போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் பாஜகவுக்கு அதிர்ச்சிகரமான தோல்வி காத்திருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பு கூறுவதாக கன்னட பிரபா பெயரில் போலிச் செய்தி பகிரப்படுகிறது. இந்த போலிச் செய்தி ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படுகின்றன. ஆனால் கன்னட பிரபா அப்படியொரு கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை என்று ஆசிரியர் ரவி ஹெக்டே ஏசியாநெட் நியூஸ் ஆன்லைனில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் கருத்துக் கணிப்பை ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் பத்திரிக்கையான கன்னட பிரபா நடத்தியதாக ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் கர்நாடக காங்கிரஸ் 115-120 இடங்களையும், பாஜக 65-70 இடங்களையும் கைப்பற்றும் என்ற போலிச் செய்தி பகிரப்பட்டு வருகிறது.
மேலும், ''ஆர்எஸ்எஸ் கருத்துக் கணிப்பு மேற்கொண்டதாகவும், 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் பாஜக 70 இடங்களுக்கு மேல் பெற வாய்ப்பில்லை. ஆய்வுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தலைவர் வி.நாகராஜூ மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். கர்நாடகாவில் பாஜக பின்னடைவைச் சந்தித்ததற்கு ஒரு முக்கிய காரணம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே நம்பகத்தன்மையை இழந்ததுதான். முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் போனதும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு குறைவதற்கு ஒரு காரணம் என்று கன்னட பிரபா பெயரில் போலியான தகவல்கள் பரவி வருகின்றன.
ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ஆனால், உண்மையில், தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற ஒன்றை கன்னட பிரபா நடத்தவில்லை மற்றும் கன்னட பிரபாவில் வெளியிடவும் இல்லை.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகாவில் மூழ்கும் விரக்தியில் இருக்கும் சிலர் தந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். கன்னட பிரபா பெயரில் போலியான கருத்துக்கணிப்புகளுடன் போலியான கட்டுரைகளை வெளியிடுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஏசியாநெட் நியூஸ் எக்ஸிகியூடிவ் சேர்மன் ராஜேஷ் கல்ரா கூறுகையில், ""போலியான செய்திகளை பரப்பிய மர்ம நபர்கள் மீது சைபர் போலீசில் புகார் அளிக்க உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்எஸ்எஸ் நடத்தியதாகக் கூறப்படும் கருத்துக் கணிப்பு, கன்னட பிரபா நடத்தியதாக கூறப்படும் கருத்துக் கணிப்பு போலியானது. அப்படிப்பட்ட கருத்துக்கணிப்பு எதுவும் நடத்தப்படவில்லை. நாங்கள் எந்த செய்தியையும் வெளியிடவும் இல்லை. நாங்கள் சைபர் போலீசில் புகார் செய்ய உள்ளோம். எங்களது பத்திரிகை நேர்மை, தைரியம் , உறுதி ஆகியவற்றை கோட்பாடுகளாகக் கொண்டு பத்திரிகை தர்மத்தை கடைப்பிடித்து வருகிறது. இதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த போலி செய்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கன்னட பிரபா முடிவு செய்துள்ளதாக ரவி ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக அமைச்சரவையின் பதவிக்காலம் 2023-ம் ஆண்டு மே மாதம் முடிவடைய உள்ள நிலையில் இந்த போலியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக தற்போது 119 இடங்களைக் கொண்டுள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, குமாரசாமி முதல்வராக கூட்டணி ஆட்சிக்கு வந்தார், ஆனால் விரைவில் ஆட்சி கவிழ்ந்தது. 2021ல் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. ஜூலை 2021-ல், எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மற்றும் பசவராஜ் பொம்மை முதல்வரானார். தற்போது, கன்னட பிரபா பெயரை தவறாக பயன்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
43 அடி ஆழ்துளை கிணறு.. 15 மணி நேரம் ஆகியும் மீட்கப்படாத 8 வயது சிறுவன் - என்ன ஆச்சு.?