வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பு இசட் பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மிக, மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், பிரதமர், முன்னாள் பிரதமர், அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நாட்டின் சிறந்த அதிகாரிகளை அனைத்து காவல் துறை பிரிவிலும் இருந்தும் எடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு குழுதான் எஸ்பிஜி.
இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பு இசட் பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெய்சங்கர் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு மூன்றாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் அஜய்: இந்தியர்களை ஏற்றிக் கொண்டு கிளம்பும் முதல் விமானம்!
நாட்டின் முக்கிய நபர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறது. அதன் சமீபத்திய கூட்டத்தில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. அதனடிப்படையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பு இசட் பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சங்கரின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் சிஆர்பிஎஃப் வீரர்கள் உட்பட மொத்தம் 36 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். கூடுதலாக, 12 ஆயுதமேந்திய காவலர்கள் அவரது இல்லத்தில் நிறுத்தப்படுவார்கள். ஆறு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், மூன்று ஷிப்டுகளில் 12 ஆயுதமேந்திய எஸ்கார்ட் கமாண்டோக்கள், மூன்று கண்காணிப்பாளர்கள் மற்றும் மூன்று டிரெண்ட் டிரைவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என தெரிகிறது.