முதல்வர் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு... உச்சக்கட்ட பரபரப்பில் பஞ்சாப்!!
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இல்லத்தின் அருகே வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பஞ்சாப் முதல்வர் பயன்படுத்திய ஹெலிபேடில் இருந்து சிறிது தூரத்தில் இருந்து இந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு வெடிக்குண்டு செயலிழப்பு படை வரைவழைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு விதிமுறைகள்... வெளியிட்டது மத்திய அரசு!!
மேலும் இந்திய ராணுவத்தின் மேற்குப் படையும் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. மாலை 4 முதல் 4:30 மணியளவில், ஹெலிபேட் மற்றும் பஞ்சாப் முதல்வரின் வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்தில் இந்த வெடிகுண்டு இருந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய பஞ்சாப் முதல்வரின் பாதுகாப்புத் தலைவர் ஏ கே பாண்டே, இது வைக்கப்பட்ட வெடிகுண்டு அல்ல.
இதையும் படிங்க: புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்
இது வெறும் ஷெல் மட்டுமே. இதற்கு முன்பும் இதே போன்ற குண்டுகள் கிடைத்தன. கவலைப்பட ஒன்றுமில்லை என்றார். இதுக்குறித்து பேசிய சண்டிகர் நிர்வாகத்தின் நோடல் அதிகாரி குல்தீப் கோஹ்லி, அங்கு ஷெல் எப்படி விழுந்தது என்பதை பாதுகாப்புப் படைகள் விசாரிக்கும். இது எப்படி இங்கு வந்தது என்பதை கண்டறிய முயற்சித்து வருகிறோம். மேலும், வெடிகுண்டு படை உதவியுடன் அப்பகுதியை பாதுகாத்துள்ளோம். இனி, ராணுவம் வந்து பார்த்துக் கொள்ளும் என்றார்.