ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு விதிமுறைகள்... வெளியிட்டது மத்திய அரசு!!
ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலைகளும் செய்துள்ளனர். இவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலைகள் அதிகரித்து வருவதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இதையும் படிங்க: புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்
இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதுக்குறித்து மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அறிவிப்பில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பது அவசியம். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இடைத்தரகர்கள் ஆன்லைன் விளையாட்டில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
இதையும் படிங்க: From the India Gate : அழகான முதல்வர் வேட்பாளர் முதல் ஆயுர்வேத ரிசார்ட் சர்ச்சை வரை - அரசியல் சலசலப்பு !!
ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக எழும் புகார்கள், குறைதீர்க்கும் முறையில் சரி செய்ய வேண்டும். இந்தியாவின் சட்டம் விதிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுகள் நடைபெற வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் சூது வைத்து ஆடும் விளையாட்டுகளுக்குத் தகுதியான வயது தொடர்பான சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.