EPF. And the recording is no longer the only form iesai - introduced soon

நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. என தனித்தனியாக படிவங்களை அளிக்கத் தேவையில்லை. அனைத்துக்கும் ஒரே பொதுவான படிவத்தில் மூலமே நிரப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆண்டுக்கணக்கில் இ.எஸ்.ஐ., பி.எப். எனத் தனித்தனியாக படிவங்கள் மூலம் நிரப்பிக்கொடுக்கப்பட்டு வந்தது. இதனால், அதிகமாக பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இந்த பணிகளைக் குறைகவும், எளிமையாக பணியை முடிக்கவும் பொதுப்படிவத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தொழிலாளர் ஓய்வூதிய நிதி அமைப்பு(இ.பி.எப்.ஓ.) மற்றும் தொழிலாளர் மாநில காப்பீடு கழகம்(இ.எஸ்.ஐ.சி.) ஆகியவற்றுக்கு தனித்தனி படிவம் இப்போது நிரப்பிக் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதை மாற்றி ஒரே படிவத்தில் அனைத்தையும் நிரப்பிக்கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த படிவத்தின் மூலம் பணிச்சுமை குறைந்து, எளிதாக செயலாக்கம் செய்ய முடியும்'' என்று தெரிவித்தார்.

பி.எப். அமைப்பில் தற்போது 4 கோடி உறுப்பினர்களும், இ.எஸ்.ஐ. 2 கோடி காப்பீடு உறுப்பினர்களும், ஒட்டுமொத்தமாக 8கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

தொழிலாளர்கள் சட்டப்படி 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அந்த நிறுவனம் பி.எப். அமைப்பில் பதிவு செய்யப்பட வஏண்டும், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால் இ.எஸ்.ஐ. அமைப்பில் பதிவுசெய்ய வேண்டும் என்பது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.