லூலு குடும்பத்தின் ரூ.600 கோடி ஊழல்! ஆவணங்களைக் கைப்பற்றியது அமலாக்கத்துறை!
ரயில்வே வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்தினர் ரூ.600 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளன.
ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கணக்கில் வராத ரூ.600 கோடி மதிப்பிலான ஊழல் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே வேலைவாய்ப்பு வழங்குவதில் மோசடி நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த வெள்ளிக்கிழமை பீகார் மாநிலத்தின் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் பலரது இடங்கள் சோதனை வளையத்துக்குள் வந்தன.
Delhi liquor scam: உண்மையான நிறம் வெளுக்காது! தெலுங்கானாவில் மத்திய அரசை சாடும் போஸ்டர்கள்!
தெற்கு டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு, அவரது மகன் தேஜஸ்வி யாதவ், மகள்கள் ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரின் வீடுகள் உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கப் பணம், 1.5 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் 1,900 அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறுகிறது.
ரூ.600 கோடி மதிப்பிலான குற்றச் செயல்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் செய்திருக்கும் முதலீடுகள் பற்றி விவரங்கள் கிடைத்துள்ளன.
இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன் சிபிஐ அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தியது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றிருக்கிறது. தற்போதைய பீகார் துணை முதல்வர் தேஜாஸ்வி யாதவ், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதா ஆகியோரும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தடாகம் பள்ளத்தாக்கில் செங்கல் சூளை குழிகளை மூட 3 மாத அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு